[ valampurii.com ]
ஜெனிவாத் தீர்மானத்தை தமிழ் மக்கள் பெரிதாகக் கருதியது மகா தவறு என்று தமிழர் தரப்பில் கூறுவோரும் உளர். இன்னோர் தரப்பு ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமை தவறான கருத்துருவாக்கங்களை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றது.
இதற்கு அப்பால், ஜெனிவாத் தீர்மானத்தால் எதுவும் நடந்து விடப்போவதில்லை. அவ்வாறு ஏதும் நடப்பதற்கு ஐ.நா சாசனம் இடம் கொடுக்காது என்று அடித்துக் கூறுவோரும் உண்டு.
யார் எந்தக் கருத்தைக் கூறினாலும் அஃது அவர்களின் அறிவின்பாற்பட்டது என்பதற்கு அப்பால், இத்தகையவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும் என்பது நம் தயவான வேண்டுகோள்.
அதாவது ஜெனிவாத் தீர்மானம் பற்றி நீங்கள் எதைக் கூறுவதாக இருந்தாலும் அதை அமெரிக்காவிடமும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமுமே கூற வேண்டும்.
ஏனெனில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் கொண்டு வருவது ஈழத் தமிழர்களாகிய நாமல்ல. அத் தீர்மானத்தை கொண்டு வருவது அமெரிக்காவே.
அதேநேரம் இலங்கையில் நடந்துள்ள போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவையென்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணையை நடத்துவதற்கான காலஅவகாசம் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இருந்தும் அதனை அவர்கள் (இலங்கை அரசு) அலட்சியம் செய்து விட்டனர்.
ஆகையால், போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பது நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிவிப்பு.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர, சர்வதேச விசாரணை தேவை என்று நவநீதம்பிள்ளை கூற, அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஜெனிவாவில் பெரும் எடுப்பில் நடைபெற, இது ஒன்றும் சரிப்பட்டு வராது,
இதற்கு ஐ.நாசாசனம் இடம் கொடாது என்று கூறுவது ஒரு தேவையற்ற விடயமாகவே இருக்கும்.
ஜெனிவாத் தீர்மானம் தோற்றால் அது அமெரிக்காவுக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திற்கும் ஏற்பட்ட தோல்வியாகவே அமையும்.
எங்களைப் பொறுத்தவரை தெய்வம் என்றோ ஒருநாள் தீர்ப்பு வழங்கும். அந்தத் தீர்ப்பு ஐ.நாவால் அல்லது அமெரிக்காவால் அல்லது சிங்கள மக்களால் கூட அமையலாம்.
இவை எதுவும் சாத்தியப்படாது என்று அடித்து கூறினால், எங்கிருந்தோ ஒருவன் வருவான்; அவன் தீர்ப்பு வழங்குவான் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
எதுவாயினும் தர்மம் வென்றதாகவே உலக வரலாறும் உலக அனுபவமும் அமைந்துள்ளதால், ஜெனிவாத் தீர்மானம் சரிப்பட்டு வராது என்று கருத்துக் கூறுவோர் அமைதி காப்பது நல்லது.
ஏனெனில் வெந்தணலாய் வேகின்ற மனத்தோடு வாழ்கின்ற எங்கள் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு உங்கள் கருத்துரைப்புக்கள் கசப்பாக, வெறுப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
உண்மை எதுவோ அதனைக் காலம் உணர்த்தட்டும். அதுவே நல்லதும் பொருத்தமானதுமாகும்.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWlq7.html
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஏற்பட்டுள்ள பிளவானது இலங்கைக்கு கிடைத்த ஒரு வெற்றியின் வடிவம் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள பிளவு இலங்கைக்கு கிடைத்த வெற்றி: மகிந்த சமரசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 12:19.42 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட மனித உரிமை பிரதிநிதியும் அமைச்சருமான மகிந்த சமரசிங்க ஜெனிவாவில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பிளவானது போருக்கு பின்னரான இலங்கையின் சாதனைகள் சர்வதேச சமூகத்திற்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
இலங்கை பிரச்சினை தொடர்பில் பல நாடுகள் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிப்பணிந்துள்ளன.
இதனால் ஜெனிவா வாக்கெடுப்பின் போது இந்த நாடுகள் நடு நிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
பல நாடுகள் தமது அரசியல் இலக்குகளை அடையும் நோக்கத்தை கொண்டுள்ளன. இது இலங்கை தொடர்பான வாக்கெடுப்பை தீர்மானிப்பதில் பெரிய பங்கை வகின்றது எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதுடன், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா முன்வைத்துள்ள இந்த பிரேரணையில் இலங்கையில் நடைபெற்ற போரின் போது போருக்கு பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டாலும் அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள போவதில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், மனித உரிமை பிரச்சினை தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் தொடரும் கூறியுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWlry.html
Geen opmerkingen:
Een reactie posten