இலங்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என பாகிஸ்தான் சமர்ப்பித்த தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 16 நாடுகள் மாத்திரமே வாக்களித்துள்ளன. எதிராக 25 நாடுகள் வாக்களித்துள்ளன. மேலும் ஆறு நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானால் மற்றுமொரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. தீர்மானம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாகிஸ்தான் கோரியது.
இந்நிலையில் போதியளவு நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு தீர்மானத்தை ஒத்தி வைக்குமாறு கோரியுள்ளது. இந்த யோசனைக்கு கியூபாவும், ரஸ்யாவும் ஆதரவளித்துள்ளன. எனினும், இந்த யோசனைக்கு அமெரிக்காவும் மொன்டன்கரோவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.
 |
Geen opmerkingen:
Een reactie posten