யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று (28) இடம்பெற்றது. இதன்போது, 'கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியதுடன், ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளனர். ஆனால், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை அவ்விடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் கைது தொடர்பாகக் வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளிக்கையிலே விமலசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்,
'கடந்த 23ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பகுதியில் வைத்து மன்னாரைச் சேர்ந்த கோபியின் நண்பனான மாணிக்கம் காந்தலயன் என்ற இளைஞர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அதன்போது, அநேகமான அப்பகுதி பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபர் நல்லவர் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர் என்று கூறினார்கள். இருந்தும், அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளின் போது அநேகமான துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன' என்றார்.
இந்த துப்பாகி ரவைகள் எங்கிருந்து வந்தது என்று தான் தெரியவில்லை. விடுதலைப் புலிகள் மீண்டும் இணைக்கிறார்கள் என்றும், அவர்களை வழிநடத்தவே கோபி என்னும் நபர் இலங்கை வந்துள்ளார் என்று கூறியும் இலங்கை இராணுவம் அவரை தேடிவருகிறது. இது இலங்கை இராணுவத்தால் புனையப்பட்ட கதை என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6608
Geen opmerkingen:
Een reactie posten