தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 31 maart 2014

மீண்டும் பாஸ் நடவடிக்கை!

கடற்புலித் தளபதி ஒருவரின் வீடு சுற்றிவளைப்பு!


பருத்தித்துறை மந்திகைப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளது முன்னாள் கடற்புலித் தளபதி ஒருவருடைய வீடு சுற்றிவளைக்கப்பட்டு, சல்லடை போட்டுத் தேடப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு;ள்ளது. இச்செய்தி வெளியாகும் வரை அங்கு படையினர் நிலை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புனர்வாழ்வளிக்கப்பட்டு குறிப்பிட்ட தளபதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தேடுதல்கள் நடந்த வேளை அவரோ அவரது குடும்பமோ அங்கிருந்திருக்கவில்லையென மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1396214294&archive=&start_from=&ucat=1&
மீண்டும் பாஸ் நடவடிக்கை!
வடமராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப்பகுதிகள் உள்ளிட்ட குடாநாட்டின் பல பகுதிகளிலும் மீண்டும் பாஸ் நடைமுறைமைகள் அமுலுக்கு வந்துள்ளது. இன்றைய தினம் மீனவ சங்கப் பிரதிநிதிகளைப் படைமுகாம்களிற்கு அழைத்துள்ள படை அதிகாரிகள் இவ்வறிவித்தலை விடுத்துள்ளனர். 

புதிய நடைமுறைகளின் பிரகாரம் தொழிலுக்குச் செல்லும் படகுகள் மற்றும் மீனவர்கள் அனைவரும் புறப்படும் போதும் தொழில் முடிந்து திரும்பும் போதும் படையினரது காவலரண்களில் பதிவுகளைச் செய்யவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் விடிந்த பின்னரே படகுகள் கரை திரும்பமுடியுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே வடமராட்சி வடக்கின் தொண்டமனாறு முதல் கற்கோவளம் வரையில் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள படையினர் கைவிடப்பட்ட காவலரண்களைப் புனரமைப்பது மற்றும் மினி முகாம்களை அமைப்பதென மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005 ம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தது போன்ற சூழலொன்றினை பேண முயற்சிகள் இடம்பெறுவதாக மீனவ சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1396214714&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten