தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!- பிரித்தானியா

கிழக்கில் பலரின் காணிகளை கொள்ளையடிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 02:24.09 PM GMT ]
கிழக்கில் முஸ்லிம் அமைச்சர்கள், பலரின் காணிகளை கொள்ளையிட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சில முஸ்லிம் அமைச்சர்கள் ஆயிரக் கணக்கான ஏக்கர் காணியை இவ்வாறு கொள்ளையிட்டுள்ளனர்.
ஆதரவாளர்கள் உறவினர்கள் போன்றவர்களுக்கு முஸ்லிம் அமைச்சர்கள் காணிகளை சட்டவிரோதமாக வழங்கியுள்ளனர்.
பாரியளவில் காணி கொள்ளையிடப்பட்டுள்ள போதிலும் பிரதேச செயலாளர்கள் தொடர்ந்தும் அமைதி பேணி வருகின்றனர்.
அரசியல்வாதிகளின் காணி கொள்ளை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு அரச அதிகாரிகளுடன் அரசியல்வாதிகள் பேணி வரும் நட்புறவே காணரமாகும்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு காணிகள் கொள்ளையிடப்பட்டு வருவதாக காணி அமைச்சு அறிவித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWit2.html
ஜெனிவா தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!- பிரித்தானியா
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 04:52.30 PM GMT ]
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பிரித்தானிய சிரேஸ்ட அமைச்சர் பார்னோஸ் வார்ஸீ தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இன்றி, அவர்களது  உறவினர்கள் பெரும் அவலத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இந்த தீர்மானத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWiu0.html

Geen opmerkingen:

Een reactie posten