தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

தேவையற்ற போராட்டங்களுக்கு வலிந்திழுக்கும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்: இ.தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்

இந்திய மீனவர்களின் விடுதலை நல்லிணக்கத்திற்கான சமிக்ஞை: மீன்பிடி அமைச்சு - விரைவில் பேச்சுவார்த்தை
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 12:30.03 PM GMT ]
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பின் பின்னர் இலங்கை- இந்தியாவுக்கிடையிலான உறவை வலுப்படுத்திக் கொண்டுள்ளதான மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடி அமைச்சின் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஷ இதுகுறித்த கருத்து வெளியிடுகையில்,
மீனவர் தொடர்பான பிரச்சினைகளை இரு நாடுகளும் அரசு மட்டத்தில் பேச்சு நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியிருப்பதாக முடிவெடுத்து சில மணி நேரங்களில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள்
அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டார்.
ஜனாதிபதி விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டமை நல்லிணக்க சமிக்ஞையாகவே காணப்படுகிறது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டன.
இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தை விரைவில் இடம்பெறும்
இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காமையை அடுத்தே இந்த சாதக நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டிருந்தது.
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் விதித்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படாமையே பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டமைக்கான காரணமாகும்.
ஜெனீவா யோசனை நிறைவேறிய சில மணித்தியாலங்களிலேயே நல்லெண்ண முயற்சியாக சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி 28 படகுகளுடன் பிடிக்கப்பட்ட 98 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWitz.html
தேவையற்ற போராட்டங்களுக்கு வலிந்திழுக்கும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்: இ.தமிழர் ஆசிரியர் சங்கம் கண்டனம்
[ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 11:40.45 AM GMT ]
தேவையற்ற போராட்டங்களுக்கு கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் வழியேற்படுத்துவதாகவும், அதிபர்கள் ஆசிரியர்களை பொறுமைகாக்குமாறும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் எந்தவொரு மாகாணத்திலும் இல்லாத வகையில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தகவல் சேகரிப்புப் படிவம் ஒன்றை ஆசிரியர்களுக்கு வழங்கி, மாணவர்களின் பரீட்சைக் காலங்களில் ஆசிரியர்களைத் துன்புறுத்தி 28.03.2014ற்கு முன்னர் படிவங்கள் கொடுக்காதவர்களின் மாதாந்த வேதனத்தை நிறுத்துவதாக அச்சுறுத்தி பல வெளிமாவட்ட, வெளிமாகாண ஆசிரியர்கள் மூன்று, நான்கு நாட்கள் விடுமுறையில் சென்று கிராமசேவகர் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் விரிசையில் நின்று பலருடைய கடினவார்த்தைகளுக்கு உட்பட்டு படிவத்தை பூரணப்படுத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் முதலாம் தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டிய அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்படவேண்டுமா? இதனால் பாதிக்கப்படுவது யார்? இந்தத் தகவல் சேகரிப்புப் பணியை பரீட்சையின் பின்னர் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்ததாகவும் அதனையும் மீறி காலக்கெடு விதித்து அதிபர்கள், ஆசிரியர்களின் வேதனத்தை நிறுத்துவதற்கான எச்சரிக்கை விடுத்தமை அனைத்துச் சமூகத்தினரிடையேயும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
இதற்காக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும், ஒருநாள் அடையாள சுகயீனப் போராட்டம் நடாத்துவதற்கும் ஆலோசித்துவரும் நிலையில் அனைவரையும் பொறுமையுடன் நடந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு முன்னர் எம்மால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அடங்கிய விடயங்கள் தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் கடந்த 27.03.2014 அன்று விசேட சந்திப்பிற்கு அழைப்பு விடுத்து அன்றையநாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறி அதனை இரத்து செய்திருந்தார்.
நாம் சுட்டிக்காட்டுகின்ற விடயங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள அத்தனை கல்வி வலயங்களிலும் உள்ள பிரச்சினைகளாகும். இதற்கான தீர்வினை நாம் சுலபமாகக் காணமுடியும். ஆனால் எதனையும் பேசித்தீர்ப்பதற்கே நாம் சிந்திக்கின்றோம்.
சில கல்வி வலயங்களில் மாகாணக்கல்விப் பணிப்பாளரின் தழுவல் அங்கீகாரத்துடன் பரீட்சைக்காலங்களில் நடைபெறும் இடமாற்றங்களை எமது பிராந்திய செயலாளர்களும் உறுப்பினர்களும் வன்மையாகக் கண்டித்த வண்ணமுள்ளனர். என்றுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRdLWis6.html

Geen opmerkingen:

Een reactie posten