இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மான வாக்கெடுப்பின் போது இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெ ஹிந்துவுக்கு கருத்துக்கு வெளியிடுகையில்,
இந்தியாவின் முடிவுக்கு காரணங்கள் தெரியாத போதும் அது தொடர்பில் இந்தியாவுடன் பேசப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜெனிவா யோசனை நிறைவேற்றப்பட்டமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது திருப்தியை வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஜெனிவா யோசனை நிறைவேற்றம் கொழும்பில் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தாது. எனினும் இந்தியாவின் தீர்மானம் சிறந்த இராஜதந்திர செயற்பாடு என்று முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் விஞ்ஞானத்துறைக்கான லண்டன் பாடசாலையின் உதவி விரிவுரையாளர் ராஜேஷ் வேணுகோபால், தமது கருத்தில் இலங்கைக்கு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRdLWiq7.html
Geen opmerkingen:
Een reactie posten