[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 02:19.49 AM GMT ]
பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினரே இப்பேரணியை நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராகவும், தமிழீழத்திற்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் பிடித்திருந்தனர்.
மேலும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி அவர்கள் கையெழுத்து பரப்புரையை மேற்கொண்டனர்.
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து, இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையினை உடனே நடத்து, அயோக்கிய அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கிறோம் என்பது உள்ளிட்ட இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
காணாமல் போன தன் அண்ணனை மீட்பதற்காக தொடர்ச்சியாக போராடி வந்த சிறுமி விபூஷிகா இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அவர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அமெரிக்க தீர்மானத்தை எரித்தும், அமெரிக்க பொருட்களை சாலையில் கொட்டி உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து, குறிப்பாக தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் சித்தரவதைகளை மற்றும் படுகொலைகளை மறைத்து, தமிழர்களுக்கு ஞாயமான முறையில் கிடைத்திருக்க வேண்டிய நீதியை மறுத்து ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் அமெரிக்க ”அயோக்கிய” தீர்மானத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இலங்கை அரசுக்கு எதிரானது என்ற பெயரில் வெறும் ”உள்நாட்டு” விசாரணையை கோரும் தமிழீழ விடுதலைக்கு எதிரான, தமிழர்களுக்கு எதிரான இந்த அயோக்கிய தீர்மானத்தை தொடர்ந்து எதிர்ப்போம், எரிப்போம் என பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlu0.html
ஈழத்தில் நடப்பது இனப்படுகொலை என நிறுவும் பேராசிரியர் மணிவண்ணனின் நூல் வெளியீடு
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 02:45.05 AM GMT ]
கடந்த 21 ஆம் திகதி மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், நீதியரசர் கே.சந்துரு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, ச. பாலமுருகன் , மக்கள் சிவில் உரிமைக் கழகம், விடுதலை இராசேந்திரன் ( தி.வி.க ) என பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியிருந்தனர்.
நீதியரசர் கே.சந்துரு தனது உரையில்,
திபெத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களையெல்லாம் ஆதரித்து உரிமையுடன் வாழ வைக்கும் இந்திய அரசு, தமிழர்கள் என்றால் மட்டும் பாராமுகமாக இருக்கிறது. பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, ஈழப்பிரச்சினைக்கு பிறகே எழத் தொடங்கியுள்ள நிலையில். புலம் பெயர்ந்தவர்களுக்கும் உரிமை இருக்கிறதென்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும் பன்னாட்டு சட்டங்கள் தேவை. ஈழத்தில் நடந்தது இன அழித்தொழிப்பே. கடந்த மூன்று தசாப்தங்களாக சிங்கள அரசு, தன் நாட்டு குடிமக்களாகிய தமிழர்களை காக்கத் தவறிவிட்டது. மேலும் இது போன்ற சமகால அரசியல் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் பேசத் தயங்கும் இக்கால கட்டங்களில், பேரா.மணிவண்ணனின் இவ்வாவணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
ஈழத்து கவிஞர் காசி அனந்தன் தனது உரையில்,
உலக அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய தலைமை அமைச்சர், முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய எல்லோரின் கைகளிலும் இந்நூல் கொண்டு சேர்க்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்திய கவிஞர், புத்தகத்தின் முக்கிய பகுதிகளை வாசித்தார். ஈழ மக்களுக்கு நடக்கும் கொடுமைகள், மறுக்க முடியாத சான்றுகள், புள்ளி விவரங்கள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள், தரவுகள் ஆகிய அனைத்தையும் பேரா.மணிவண்ணன் இந்நூலில் அடுக்கியுள்ளார் என தெரிவித்தார்.
தோழர் தியாகு கருத்து வெளியிடுகையில்,
இலங்கை அரசு செய்வது சோற்றுக்குள் யானையை மறைக்கிற வேலை. அதை அவர்களால் நீண்டகாலம் செய்யமுடியாது. மேலும் நடந்தது இனக்கொலை என்று தெரிந்தும் நம்மால் நிரூபிக்க முடியவில்லை. ஐ.நாவின் எந்த உறுப்பு நாடுகளும் நடந்தது இனக்கொலை என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.
பேரா. மணிவண்ணன் நடந்தது இனக்கொலை தான் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக அல்ல, ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டது போல, இனக்கொலையின் நோக்கம் ( Intent ) நிரூபிக்கப்பட வேண்டும். நோக்கம் என்பது நடந்து முடிந்ததை மட்டும் கொண்டும் பார்க்கப்படுவதில்லை. நடந்து கொண்டிருப்பவைகளை கணக்கில் கொண்டும் பார்க்கப் பட வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகளை அடக்குமுறைக் கருவிகளாக பயன்படுத்தும் போஸ்னியா, செர்பியா நாடுகளின் பட்டியலில் இலங்கையையும் சேர்க்க வேண்டும். மேலும் ஐ.நா. அவையில் அனந்தி சசீதரன், சிங்கள அரசு பாலியல் வன்கொடுமைகளோடு, தமிழ்ப் பெண்களை விலைமாதர்களாகவும் மாற்றி வருகிறது. இது தமிழ்ப் பண்பாட்டையே சீர்குலைக்கும் நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
ஈழத்தில் நடந்தது இனக்கொலை தான் என்பதற்கு, கோத்தபாய ராசபக்சேவின் திமிர்வாதப் பேச்சே போதுமானது. கோத்தபாய சொல்கிறார், “வடக்கில் தமிழர்களை எங்களால் நம்ப முடியாது. அங்கு எம் இராணுவத்தினர் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யாவிடில் தான் நான் வியப்படைவேன்” மேலும் தமிழர்களின் குருதிச் சேதத்திற்கு நாங்கள் குருதிக்கொடை” செய்திருக்கிறோம். கோத்தபயவின் இந்த பேச்சு, தமிழர்கள் மீது தான் இத்தகைய கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என நிரூபிப்பது மட்டுமின்றி, அங்கு இருப்பது சிங்கள இராணுவமே, இலங்கை இராணுவமல்ல என்பதையும் நமக்கு காட்டுகிறது.
மேலும் இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு கருத்தடை, ஆனால் சிங்கள குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது குழந்தைக்கு ஊக்கத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இனவழிப்பு பங்களிப்பிற்கு, இந்திய அரசிற்கும் ஒரு பெரும்பங்கு இருக்கிறது. இந்திய அரசு இந்த குற்றங்களுக்கெல்லாம் கழுவாய் தேட வேண்டும். ஆனால் அது தானாக தேடாது. நம் தமிழ் மக்கள் தான் அதை தேடும்படி செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
தோழர் நெடுமாறன்:
எந்த அரசுகள் மாறினாலும் வெளியுறவுக் கொள்கைகள் மாறப் போவதில்லை. இந்திரா காந்தி செய்த சிற்சில மாற்றங்களைக் கூட அடுத்து வந்த இராஜிவ் காந்தி அரசு ஒன்றுமில்லாமல் போகச் செய்து விட்டது.
மேலும் மாற்றுக் கருத்துகளை முற்றாக நீர்த்துப் போகச் செய்வதற்குரிய சக்திகள் நம் நாட்டிலேயே இருக்கின்றன. இந்நிலையில், பேரா.மணிவண்ணனின் இந்நூல், உலங்கெங்கும் வாழும் அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், புலம் பெயர் வாழ் தமிழர்கள் கைகளில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlu1.html
Geen opmerkingen:
Een reactie posten