இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை ஐக்கிய நாடுகளில் முன்வைக்க புதிய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்ää இலங்கையில் இடம்பெற்ற தமிழர் படுகொலைகளுக்கு பொறுப்பான இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த யோசனை மூலம் இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும் போது தமிழக மீனவர்களும் பிரச்சினைகள் இன்றி தமது தொழிலை மேற்கொள்ளமுடியும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமக்கு நாட்டின் யதார்த்த நிலை புரியாது என்று மத்திய அமைச்சர் பா சிதம்பரம் வெளியிட்ட கருத்துக்கு பதில் வழங்கிய ஜெயலலிதாää நாட்டின் ஒவ்வொரு மூலையும் தமக்கு தெரியும் என்று குறிப்பிட்டார்.
1984 ஆம் ஆண்டு லோக்சபை தேர்தலின் போது நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கு சென்றதாக குறிப்பிட்ட அவர் அன்று சிதம்பரம் திறந்த ஜீப் வண்டியில் தம்மை தொடர்ந்து வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRdLWiq6.html
Geen opmerkingen:
Een reactie posten