[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 02:04.16 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி இலங்கை அரசாங்கம், பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகள் எதிராக சுமத்தியுள்ள பல குற்றச்சாட்டுக்களின் பாரதூரமான தன்மை கவனத்தில் கொள்ளும் போது, அவற்றை உறுதிப்படுத்த எந்த ஒரு காரணியும் இல்லை என ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளதாக வீரதுங்க தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு கடந்த 12 ஆம் திகதி கிடைத்த கடிதத்திற்கு பதிலளிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகள் மீது நீங்கள் சுமத்தியுள்ள பல குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்த சிறியளவிலான சாட்சியங்களோ, காரணிகளோ இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், பொலிஸ் மற்றும் புலனாய்வு சேவைகள் மீது நீங்கள் சுமத்தியுள்ள பல குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்த சிறியளவிலான சாட்சியங்களோ, காரணிகளோ இல்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்து உண்மையை அறிய விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தன் காரணமாகவே உங்களது கடிதத்திற்கு பதிலளிக்க தாமதமானது.
உங்களது தனிப்பட்ட சுதந்திரம் மீறப்பட்டமை, இடையூறு,அழுத்தஙகள் கொடுக்கப்பட்டமை, உங்களது தனிப்பட்ட பாதுகாப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியமை, உங்களது அடிப்படை உரிமைகளை மீறயமை, தனிப்பட்ட பயணங்கள், நபர்களுடன் பழகும் சுதந்திரத்திற்கு தடையேற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நீங்கள் முன்வைத்துள்ளீர்கள்.
எனினும் அதற்கான காரணிகளோ, காரணங்களோ இல்லை என்பதை ஜனாதிபதி ஆராய்ந்து அறிந்துள்ளார். உங்களது குற்றச்சாட்டுக்கள் காரணங்கள் மற்றும் காரணிகளை அடிப்படையாக கொண்டமை அல்ல.
உங்களுடைய தொலைபேசி, மின்னஞ்சல்கள் தொடர்பாகவோ, உங்களது ஹொரகொல்ல மற்றும் கொழும்பு வீடுகள் பற்றியோ புலனாய்வு தகவல்களை சேகரிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதை ஜனாதிபதி ஊர்ஜிதப்படுத்தியுள்ளதாக லலித் வீரதுங்க அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆசிரியர் நிரூபனின் படுகொலையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் - யாழில் பொலிஸாருக்கு அஞ்சலி
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 02:34.24 PM GMT ]
வவுனியா பாடசாலையொன்றில் பணிபுரிந்த யாழ். கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் நிரூபன், கடந்த வருடம் செப்டம்பர் 19ம் திகதி காணாமல் போனார்.
இந்நிலையில், கடந்த 12ம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் காணி ஒன்றில் எலும்புக் கூடு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில், மறுநாள் நிரூபனின் சகோதரி இந்த எச்சம் தனது சகோதரனுடையது என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தச் சம்பவங்களின் தொடராக நிரூபன் காணாமல் போனமை, சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனடிப்படையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் உடைகளில் கறுப்புப்பட்டி அணிந்து திரண்ட ஆசிரியர்கள் கண்டனக் கோசங்களை எழுப்பினர்.
“ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி!”, “ஆசிரியர் நிரூபனை ஏன் கொன்றாய்?”, “ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி”, “நிரூபனின் கொலைக்கு விசாரணை எங்கே?”, “நீதி கேட்பவர்களை கைது செய்து பழிவாங்காதே”, “இலங்கை எலும்புக்கூடுகளின் நாடா?” , “அரசே! ஆசிரியர் நிரூபனின் எலும்புக்கூட்டுக்கு பதில் கூறு” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் புதிய ஜனநாயக மாக்சிய லெனினிச கட்சி என்பனவற்றின் பிரதிநிதிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன் மற்றும் சுகிர்தன் ஆகியோரும், பிரதேச சபை உறுப்பினர்களும், ஆசிரியர்களும் எனப் பெருமளவானோர் பங்கு கொண்டிருந்தனர்.
இதனிடையே ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வேளை, யாழ். பேருந்து நிலையப் பகுதியில் “ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தற்கொலை செய்து கொண்டார்” என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் ஒன்றும் பெரும் எண்ணிக்கையில் அடையாளம் தெரியாதோரால் வீசப்பட்டிருந்தது.
சம்பவத்தை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்தத் துண்டுப்பிரசுரங்களைக் கைப்பற்றி அது பொய் எனவும், திட்டமிட்ட நடவடிக்கை எனவும் எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியில் அவற்றுக்குத் தீயிட்டுக் கொளுத்தினர்.
யாழில் பொலிஸாருக்கு அஞ்சலி
கடமையில் இருக்கும் போது அகால மரணமடைந்த பொலிஸாரை நினைவு கூரும் நிகழ்வு இன்று நாடளாவிய ரீதியில் பொலிஸ் திணைக்களத்தினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் பொலிஸ் கட்டளை பணியகத்தில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
அதேவேளை, யாழ்.மாவட்ட பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 7.45 மணியளவில் யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது இறந்த பொலிஸாருக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்.மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, 512 இராணுவ படைப்பிரிவின் அதிகாரி, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஏனைய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRVLWmsz.html
Geen opmerkingen:
Een reactie posten