[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 04:26.16 PM GMT ]
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஆத் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.
இலங்கை்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkx4.html
இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்தப்படும்: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உறுதி
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 03:13.58 PM GMT ]
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டனர்.
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில், காங்கிரஸ் இவ்வாறு வாக்குறுதி அளித்துள்ளது.
அத்தேர்தல் அறிக்கையில்,
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து நேர்மையான, முழுமையான, விரைவான விசாரணை நடத்துவது உறுதி செய்யப்படும்.
இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களுக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் சட்டரீதியாக சம உரிமை வழங்குவது உறுதி செய்யப்படும். தமிழர்கள் அதிகம் இருக்கும் வடக்கு மாகாணத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு தன்னிச்சையான மாகாணங்களாக உருவாக முயற்சிகள் எடுக்கப்படும்.
இலங்கைத் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையினர் தங்களது வாழ்வை முறையாக மறுசீரமைத்துக் கொள்ளத் தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராகவே மத்தியில் ஆளும் காங்கிரஸ் அணி வாக்களித்து வருகிறது.
இந்தத் தேர்தல் அறிக்கையும், தொடர்ந்து ராஜபக்சவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
வலுவான, ஆரோக்கியமான வெளியுறவுக் கொள்கைகளை அமுல்படுத்தவதோடு, அண்டை நாடுகளுடன் நிலையான, அமைதியான, பரஸ்பரமான உறவை மேம்படுத்தவும் காங்கிரஸ் கட்சி உறுதி கொண்டுள்ளதாக தேர்தல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக சென்ற வருடம் மார்ச் மாதம் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkxy.html
Geen opmerkingen:
Een reactie posten