[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 11:45.31 AM GMT ]
இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் விசாரணை நடாத்துவதன் மூலம் எவ்வித லாபத்தையும் தாம் எதிர்பார்க்கவில்லை.
கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் போது போர் இடம்பெற்ற வலயங்களுக்கு விஜயம் செய்த பிரதமர் கமரூன் நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.
பிரதேச மக்களுடன் பேசுவதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
போர்க் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதன் மூலம் இலங்கை மக்களே நன்மைகளை அனுபவிப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkv7.html
இலங்கை குறித்த தீர்மான வாக்கெடுப்பு இன்று மாலை அல்லது நாளை நடக்கும்
[ புதன்கிழமை, 26 மார்ச் 2014, 11:30.23 AM GMT ] [ பி.பி.சி ]
இன்னும் கொஞ்ச நேரத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம்பிள்ளை அவர்களின் அறிக்கை ஒன்று மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
அதனை அவர் அங்கு வாசிப்பார். அதனை அடுத்து அது குறித்த விவாதங்கள் நடக்கும்.
அந்த விவாதம் நீண்ட நேரம் தொடருமானால், இலங்கை குறித்த தீர்மான வாக்கெடுப்பு நாளைய தினம் நடைபெறும். அல்லது இன்று பிற்பகல் 3 மணிக்கு பின்னதாக அது நடக்கலாம்.
இதற்கிடையே, இலங்கையில் இறுதிப் போரின் போதும், அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக ஏற்கனவே வந்திருக்கும் தீர்மான வரைபில் மேலும் மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படலாம் என்றும் ஜெனிவாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
\
http://news.lankasri.com/show-RUmsyDRaLWkv6.html
Geen opmerkingen:
Een reactie posten