தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 29 maart 2014

5 ஆண்டுகளுக்குப் பின்னரும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மறுக்கும் இலங்கை!- ஐநாவுக்கான அமெரிக்க தூதுவர் !

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னரும், இலங்கை அரசாங்கம், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க மறுத்து வருகிறது. அத்துடன், பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தி வருகிறது என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அவர் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போர் முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பின்னரும், இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தின் மதிப்பைச் சீரழித்துள்ளதுடன், போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கவும் மறுத்து வருகிறது.
பொறுப்புக்கூறலையும் தாமதப்படுத்தி வருகிறது என்றும் சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyDRdLWiq3.html

Geen opmerkingen:

Een reactie posten