தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 maart 2014

இங்கு பேச வேண்டாம் கூட்டமைப்போடு பேசுங்கள்; முதல்வர் அதட்டல்

ஜெயக்குமாரி மற்றும் விபூசாவின் கதையை மாநகர சபையில் கூறவேண்டாம் மாகாணசபையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ கூறுங்கள் என யாழ். மாநகர சபை முதல்வரால் எச்சரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது.
2014ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாநகரசபைக் கூட்டம் இன்று முதல்வர் தலைமையில் இடம்பெற்றது. அதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் சோதிலிங்கத்தினால் குறித்த செயற்பாட்டிற்கு சபை கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்தார். அதன்போதே முதல்வர் உட்பட ஆளும் கட்சியினரும் இணைந்து அவரது தீர்மானத்தை நிராகரித்தனர்.
அதன்படி இறுதிக்கட்ட போரில் இராணு|வத்திடம் ஒப்படைத்த தனது பிள்ளையினது விடுதலைக்காக குரல் கொடுத்துவந்த ஜெயகுமாரி மற்றும் மகள் விபூசிகா ஆகியோர் காரணங்கள்  இன்றி கைது செய்யப்பட்டுள்ளமையையும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினையும் இந்த சபை வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த நிலைக்காக வேதனையடைவதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறும் இச்சபை கேட்டுக் கொள்கின்றது. மேலும் இந்நிலை தொடருமானால் ஆசிரியர் நிரூபன் மீட்கப்பட்டதைப் போன்ற நிலையே எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர் சோதிலிங்கம் சபையில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர்,
இந்த விடயம் குறித்து மாகாண சபையிலேயோ அல்லது நாடாளுமன்றிலோ தான் கதைக்க வேண்டும். அத்துடன் இந்த அறிக்கை உங்களின் பெயருடன் வரவிரும்பினால் உங்கள் கைப்பட எழுதி பத்திரிகைகளுக்கு கொடுங்கள்  அவர்கள் போட்டுக் கொள்வார்கள் இந்த விடயம் தொடர்பில் இங்கு பேசவேண்டாம் என்றார்.
மேலும் ஆளும்கட்சி உறுப்பினர் இளங்கோ தெரிவிக்கையில்,
உங்களின் பிரச்சினை எங்களுக்கு விளங்குகின்றது. இதனை கூட்டமைப்பிடமோ அல்லது மாகாண சபையிலோ கூறுங்கள்  என்றார். தொடர்ந்து முதலமைச்சர் உள்ளிட்டவர்களுடன்  இது குறித்து கதையுங்கள். அவர்களுக்கு பலம் இருக்கின்றது.அவர்கள் ஜனாதிபதியோடு பேசி தீர்வு காணுவார்கள் என்றார்.
vipuchika
http://www.jvpnews.com/srilanka/63645.html

Geen opmerkingen:

Een reactie posten