தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 maart 2014

மக்கள் இயக்கமாக நாடு தழுவிய அளவில் ஈழப்பிரச்சினையை காவிச்செல்ல வேண்டும்: நீதியரசர் சந்துரு



இலங்கைக்கு எதிரான யோசனை அரசியல் மயமானது: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 01:55.03 PM GMT ]
இலங்கைக்கு எதிரான ஜெனிவா யோசனை அரசியல் பின்னணியில் ஒழுங்கற்ற அட்டவணையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வென் ஓர்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று இந்த செய்தியை லண்டனில் உள்ள தமது செய்தியாளரை கோடிட்டு வெளியிட்டுள்ளது.
இலங்கை தொடர்பான யோசனை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற விவாதத்தின் போதே ஜெப்ரி தமது கருத்தை வெளியிட்டார்.
சிம்பாப்வே, யுக்ரெய்ன் ஆகிய நாடுகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. ஆபிரிக்காவில் இன்னும் அடிமைத்தனம் முன்னிலைப் பெறுகிறது.
கிறிஸ்தவர்கள் பல நாடுகளில் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தநிலையில் இதனை கவனிக்காத ஐரோப்பிய ஒன்றியம் ஏன் இலங்கையை மாத்திரம் குறிவைத்து செயற்படுகிறது என்று ஜெப்ரி கேள்வி எழுப்பினார்.
தற்போதைய நிலையில் இலங்கை அரசாங்கம் சரியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் இலங்கை மீது ஏன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று ஜெப்ரி கேள்வி எழுப்பினார்.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWlr3.html

மக்கள் இயக்கமாக நாடு தழுவிய அளவில் ஈழப்பிரச்சினையை காவிச்செல்ல வேண்டும்: நீதியரசர் சந்துரு
[ ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2014, 01:28.48 PM GMT ]
இந்தியாவின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு ஈழத்தமிழர் பிரச்சனையினை கொண்டு செல்ல, இவ்விவகாரத்தினை மக்கள் இயக்கமாக நாடுதழுவிய ரீதியில் காவிச் செல்லப்பட வேண்டும் என தமிழகத்தின் ஒய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 25வது கூட்டத் தொடரினை மையமாக கொண்டு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள "தமிழர்களுக்கான பரிகாரநீதி" வெளியிட்டு விழா சென்னையில் நேற்று இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே நீதியரசர் சந்துரு அவர்கள் இக்கருத்தினை தெரிவித்திருந்தார். 
தமிழகத்தில் இருந்து ஈழத்திற்கு ஆதரவாக 40 எம்.பி.க்கள் பாராளுமன்றம் சென்றாலும் இந்தியா நம் கோரிக்கைக்கு செவி சாய்க்காது. மீதமுள்ள 500 எம் பிக்களுக்கும் இப்பிரச்சினை குறித்து எந்தவித புரிதலும் இல்லை. அதனால் இந்திய அரசு தமிழர் விரோத கொள்கையை மாற்றிக் கொள்ளாது.
மக்கள் இயக்கமாக நாடு தழுவிய அளவில் இப்பிரச்சினையை நாம் எடுத்து செல்வதின் மூலமாகவே இந்தியாவை அடிபணிய வைக்க முடியும் என தனதுரையில் நீதியரசர் சந்துரு அவர்கள் தெரிவித்திருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.
இந்நிகழ்வில் நீதியரசர் சந்துரு, பேராசிரியர் மணிவண்ணன், கனடா தமிழ் சங்கத்தின் தலைவர் ராசரத்தினம், விடுதலை ராசேந்திரன், எழுத்தாளர் செய்பிரகாசம், வழக்குரைஞர் பாண்டிமாதேவி, அஜிதா, ஊடகவியலாளர் டி.எஸ் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வரங்கின் சுருக்கம்:
2009 இல் நடந்த இனப்படுகொலைக்கும், அதன் பின் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பின்பும் தமிழர்களுக்கு எத்தகைய நீதி கிடைக்க வேண்டும் என்பதை குறித்து இந்த நூல் விளக்கியுள்ளது என்று விடுதலை ராசேந்திரன் தெரிவித்தார்.
இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது பொய், இது ஒரு இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பே என்பதை இந்நூல் விளக்கியுள்ளது என்று பாண்டிமாதேவி தெரிவித்தார்.
ஈழத்தில் நடந்த மனிதப் படுகொலை இந்தியாவில் அரசியல் ஆக்கப்படுவதில் தான் நம் வெற்றி அடங்கியுள்ளது என்பதை பேரா. மணிவண்ணன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த செல்வாக்கும் இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் ஈழத்திற்கு இந்தியா இழைத்த அநீதி தான் என்பதையும் கூறினார்.
கனடா நாட்டில் மூன்று லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை கனடா நாடு காதுகொடுத்து கேட்கிறது. ஆனால் இந்தியாவில் எட்டு கோடி தமிழர்கள் இருந்தும் இந்தியா தமிழர்களை கண்டு கொள்வதில்லை. தமிழர்களின் கோரிக்கையை உலக வல்லாதிக்க நாடுகள் வழிய வந்து கேட்கும் நிலையை தமிழர்கள் நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலை வரும் வரை நமக்கு நீதி கிடைக்காது என்று பதிவு செய்தார் கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் ராசரத்தினம்.
இலங்கைத்தீவில் தமிழர்களது இனநெருக்கடி விவகாரத்தினை மதச்சிறுபான்மையினருக்கு இடையிலான விவகாரமாகவும், ஒட்டுமொத்த சிறிங்காவின் மனித உரிமை மீறல்களாகவும், அனைத்துலகம் சமகாலத்தில் வியாக்கியானம் செய்து வரும் நிலையில், தமிழர்கள் என்ற இனத்தின் அடிப்படையிலேயே அத்தனை மீறல்களும் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறுகின்றன என்பதனை இக்கையேடு வலியுறுத்தி நிற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRXLWlr2.html

Geen opmerkingen:

Een reactie posten