தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 24 maart 2014

புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்!- அரசிற்கு ஏற்பட்டுள்ள திடீர் புலிக் காய்ச்சல்!

உள்ளாடைகளை திருட வீட்டுக்குள் புகுந்து தர்ம அடி வாங்கிய இராணுவ வீரர்!
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 09:21.57 AM GMT ]
ஹிங்குராக்கொட இராணுவ முகாமில் சேவையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் நேற்றிவு அந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிக்குள் அனுமதியின்றி சென்றுள்ளார்.
இதனையடுத்து பிரதேசவாசிகள் அவரை பிடித்து கடுமையாக தாக்கிய பின்னர், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்படும் போது அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது.
சம்பவத்தில் காயமடைந்துள்ள இராணுவ வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இராணுவ வீரர் நீண்டகாலமாக அந்த பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
http://news.lankasri.com/show-RUmsyDRYLWlwy.html
புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்!- அரசிற்கு ஏற்பட்டுள்ள திடீர் புலிக் காய்ச்சல்
[ திங்கட்கிழமை, 24 மார்ச் 2014, 09:32.42 AM GMT ]
புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட இரு நபர்களின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல கிராமங்களிலும் காடு மேடுகளிலும் இந்தப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள திடீர் புலிக் காய்ச்சல்
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக தேடப்பட்டு வரும் புலிகளின் அமைப்பின் மற்றுமொரு முன்னாள் போராளி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தேவியன் என அழைக்கப்படும் இந்த நபர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பிரதானமாக நடமாடி வருவதாகவும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் காணக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பற்றிய உண்மையான தகவல்களை வழங்கும் நபருக்கு ஒரு மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சந்தேக நபர் பற்றி அறிந்தால், பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோபி என்ற நபர் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.
கோபி என்பவர், புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறி வருகிறது.
இந்தநிலையில், மற்றுமொரு முன்னாள் புலி உறுப்பினர் பற்ற தகவல் தருபவருக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

http://news.lankasri.com/show-RUmsyDRYLWlwz.html

Geen opmerkingen:

Een reactie posten