தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 maart 2014

ஜேர்மன் பெண்ணொருவரை கடத்த முயற்சித்த பொலிஸார் கைது- யாழ்ப்பாணத்தில் எட்டு இந்தியர்கள் கைது !

ஜேர்மன் பெண்ணொருவரை கடத்த முயற்சித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 வயதான ஜேர்மன் பெண்ணொருவரை முச்சக்கரவண்டியொன்றில் கடத்த முயற்சித்துள்ளனர்.
குறித்த யுவதி, பண்டாரவளை, எல்லே பல்லேகெட்டிய வீதியில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த வேளை, எல்லை பொலிஸார் இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேற்படி பெண் தனது காதலனுடன் நடந்து சென்றுகொண்டிருந்த போதே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எட்டு இந்தியர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றில் குறித்த இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண விசேட பொலிஸ் பிரிவினர் குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
சுற்றுலா வீசாவில் நாட்டிற்குள் பிரவேசித்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten