ஆனால், தமிழினம் எமது தமிழ்த் தாயகத்தில் அழிக்கப்பட்ட போதும், இப்போது சித்திரவதைப்பட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் எங்களை அந்தக் கொடுமையில் இருந்து மீட்க யாருமே வரவில்லையே, முயற்சி கூட செய்யவில்லையே!
எந்தப் பாவமுமே அறியாத பச்சிளங் குழந்தைகள் கொடுமைப் படுத்தப்பட்டு கொல்லப்பட்ட வேளையில் கூட எந்த நாடுமே அதை எதிர்த்துக் கேட்கவில்லையே...
காரணம் என்ன???
தமிழினத்தின் உயிர் மற்றவர்களுக்கு துச்சமாகத் தெரிகிறதா!!
அல்லது அந்த 239 பேருக்கும் தமக்கென்று ஒரு தனிநாடு இருக்கின்றது, தமிழினத்திற்கு அது இல்லை என்பதினாலா!!!
நாங்கள் தமிழராகப் பிறந்தது தான் நாங்கள் செய்த குற்றமா?????
50,000 ஆண்டு காலங்களுக்கு முன்பே தோன்றிய தமிழினத்தை அழிக்க ஏன் இப்படி ஒரு வெறி...
"உலகத்தில் எவருக்கு என்னவென்றாலும், எவர் செத்தாலும் தமிழர் நங்கள் கவலைப்படுவோம், கண்ணீர் சிந்துவோம்.. ஆனால் எமக்கொன்றானால் மட்டும் எம்மை பற்றி எவருமே {எந்த நாடுமே} கவலைப்படாது...

Geen opmerkingen:
Een reactie posten