வட-கிழக்கு பகுதியில் பாலியல் வன்முறை, இளைஞர்கள் மீதான போதைப் பொருள் திணிப்பு மற்றும் வன்முறைக் கலாசாரத்தை திட்டமிட்ட ரீதியில் பரப்புதல் என்பவற்றுக்கு எதிராகவும், மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாகவும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நெல்லியடி பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, ஈ.சரவணபவன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், வே.சிவயோகன், பா.கஜதீபன், ச.சுகிர்தன் மற்றும் பிரதேச சபைகள் மற்றும் நகரசபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வடமராட்சி தென்மேற்கு (கரவெட்டி) பிரதேச செயலாளர் சிவசிறியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
http://news.lankasri.com/show-RUmsyDSYLVgx3.html
Geen opmerkingen:
Een reactie posten