தமிழினத் துரோகி சுமந்திரன் குறித்து புட்டு புட்டுவைக்கும் ஆனந்தி சசிதரன் !

மக்களால் தேர்தலில் தெரிவுசெய்யப்படாமல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பட்டியல் மூலமாக தெரிவாகிய சுமந்திரன், ஆடும் நாடங்கள் பல தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பின் கதவால் உள் நுளைந்த சுமந்திரன் குறித்து அவ்வப்போது பல தகவல்கள் மீடியாக்களில் வெளியாகியது. ஆனால் அதற்கான சாட்சியங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்றைய தினம் யாழில் வடமாகானசபை உறுப்பினரான ஆனந்தி, சுமந்திரன் தொடர்பாக சில செய்திகளை வெளிப்படையாகவே வெளியிட்டுள்ளார். ஜெனீவா சென்ற தூதுக்குழுவில் தாம் இருந்ததாகவும், அங்கே நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில் தாம் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் திடீரென தன்னை தொலைபேசியில் அழைத்த சுமந்திரன், இனி நீர் எது குறித்தும் பேசவேண்டும் மெளனமாக இருக்கவேண்டும் என்று தனக்கு கடுமையாக உத்தரவு போட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையே சரியானது என்றும், அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்கு அமைவாகவே நாம் செல்லவேண்டும் என்று அவர் ஆனந்தியிடம் கூறியுள்ளார். இதேவேளை நீர் விடுதலைப் புலிகளோடு பல காலம் இருந்த நபர், அதனால் நீர் ஜெனீவானில் எதுவும் பேசவேண்டாம் என்று சுமந்திரன் கூறியுள்ளார். நடந்து முடிந்த வடமாகானசபைத் தேர்தலில், முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர் ஆனந்தி. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அவருக்கு, தமிழர்கள் தொடர்பாக பேசும் ஆணையை மக்களை வழங்கியுள்ளார்கள். இன் நிலையில் அவர் ஜெனீவாவில் பேசவிடாது தடுத்து, அமெரிக்காவின் வாலைப் பிடித்தால் தான் எல்லாம் நடக்கும், நீர் அமைதியாக இரும் என்று சுமந்திரன் கூறியுள்ளார். ஆனால் தற்போது ஒன்றுக்கும் உதவாத தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. அதில் மேலும் 1 வருட அவகாசத்தை இலங்கைக்கு வழங்கவிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்திற்கு நேரத்தை வழங்கும், மற்றும் அதனை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்ப வைக்கும் முயற்சியில் தற்போது அமெரிக்கா இறங்கியுள்ளது. இதற்கு சுமந்திரன் மேலும் சில புல்லுருவிகள் அமெரிக்காவின் வாலைப் பிடித்தபடி தமிழர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இவர்கள் அனைவருமே இலங்கை - அமெரிக்க கூட்டுச் சதிக்கு துணைபோகும் நபர்கள் தான். அமெரிக்கா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் இணைந்து அவரச தீர்வு திட்டம் ஒன்றை முவைக்க திட்டமிட்டுள்ளார்கள் என்று அறியப்படுகிறது. அதாவது 33 வருடப் போராட்டத்திற்கான தீர்வை 3 நாட்களில் வைக்க இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் திணிக்க நினைக்கும் தீர்வு திட்டத்தை சில தமிழர்கள் ஏற்க தீர்மானித்துள்ளார்கள். இவர்களே தற்போது அமெரிக்க தீர்மானம் நல்லது எனவும் அதில் பல அம்சங்கள் இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.
இத்தனை ஆயிரம் மாவீரர்களை நாம் இழந்து, பல மக்கள் கொல்லப்பட்டு, தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டு, மேலும் நாசம் செய்யப்பட்டும் உள்ளது. இவை அனைத்தையும் நாம் இழந்தது எல்லாம் எங்கோ இருக்கும் ஒரு நாடு , எம்க்கான தீர்வு திட்டத்தை வரையவா ? தமிழர்களே தமது தீர்வை தாமே நிர்ணயிக்கவேண்டும். தமிழர்களே தமிழர்களை ஆழும் ஒரு நிலை தோன்றவேண்டும். ஈழத் தமிழர்களின் கெளரவம் காப்பற்றப்படவேண்டும். அவ்வாறு ஒரு தீர்வுத் திட்டமே தமிழர்களுக்கு இன்று தேவையாக உள்ளது. இதுவே யதார்த்தமும் கூட. இதனை தமிழர் தரப்பே முன்னெடுக்கவேண்டுமே தவிர, பிற நாடுகள் அதனை வரைவது என்பது மிகவும் வேடிக்கையான விடையம். தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதனூடாக ஒரு தீர்வை வரைவதே முறையாகும். எமது உரிமையை வென்றெடுக்க நாமே போராடவேண்டும். அதனை விடுத்து பிறநாடுகளை நாம் நம்பி இருந்தால் இவ்வாறு பெரும் ஏமாற்றத்தை தான் நாம் சந்திக்க நேரிடும்.
Geen opmerkingen:
Een reactie posten