தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 6 maart 2014

ஈழத் தமிழ் கோபிதாஸ் குடும்பத்தை கைவிட்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் !


சில நாட்களுக்கு முன்னர், கொழும்பில் உள்ள சிறைச்சாலையில் உள்ள மலசல கூடத்தில், கோபிதாஸ் என்னும் பிரித்தானிய குடியுரிமை பெற்ற நபர் இறந்து கிடந்தார் என்ற செய்தியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக சிங்கள அதிகாரிகள் தெரிவித்து இருந்தார்கள். இருப்பினும் அவருடன் இருந்த கைதிகளில் ஒருவர், வடமாகான சபை உறுப்பினரான ஆனந்தி சசிதரனை தொடர்புகொண்டு, கோபிதாஸ் அடித்து கொலைசெய்யப்பட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அவரது உடலை பிரித்தானியா கொண்டுசென்று அங்குள்ள வைத்தியர் ஒருவர் ஊடாக, பிரேதப் பரிசோதனை நடத்தவேண்டும் என்று அவரது மனைவி கோரிக்கை விடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இலங்கை அதிகாரிகள், தாமே உடலை பதப்படுத்திவிட்டார்கள்.

அதாவது "எம்பாம்" செய்துவிட்டார்கள். உடலில் உள்ள இருதயம், சிறுநீரகம், கணைய சுரப்பிகள், ஈரல், இரப்பை , நுரையீரல் என்று அனைத்தையும் அவர் உடலில் இருந்து அகற்றி, உடலை பதப்படுத்தி விட்டார்கள். இதனால் கோபிதாஸ் உண்மையாகவே மாரடைப்பு வந்து தான் இறந்தாரா என்று யாராலும் அறிய முடியாத நிலை தோன்றியுள்ளது. பிரித்தானியாவுக்கு அவரது உடலை எடுத்துச் செல்ல, தம்மால் முடியாது என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயரதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். சட்ட ஆலோசனையாவது சொல்லுங்கள் என்று கோரிய போது, குறைந்த பட்சம் அதனைக் கூட செய்ய அவர்கள் தயாராக இல்லை என்று கோபிதாசின் மனைவி தற்போது தெரிவித்துள்ளார். கோபிதாசின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்று பிரித்தானிய வைத்தியர்கள் அறிக்கை ஒன்றை சமர்பித்து இருந்தால், அது பெரும் சாட்சியாக மாறி இருக்கும். 

இலங்கை பொலிசார் அவரை அடித்துக் கொன்ற விடையம், பிரித்தானிய வைத்தியர்களால் உறுதிசெய்யப்பட்டு இருக்குமேயானால் அதனை ஜெனீவா வரை கொண்டுசென்றிருக்கலாம். ஆனால் இதனை மேற்கொள்ள பிரித்தானியா அரசு தயாராக இல்லை என்ற உண்மை தற்போது தமிழர்களுக்கு நன்றாகப் புரிந்துள்ளது. ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி, ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என பல தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சுமாட் 4 லட்சம் தமிழர்கள் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் செலுத்தும் "டாக்ஸ்" (மக்கள் வரிப்பணம்) அதிக அளவில் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது, எமது வரிப் பணத்தில் இயங்கு இன் நாட்டு அரசு, ஏன் எம்மின மக்களுக்கு உதவ முன்வரவில்லை என்ற கேள்விகளும் இங்கே எழுகிறது. பிரித்தானிய தமிழர் பேரவையினர்(BTF) கோபிதாசின் உடலை பிரித்தானியாவுக்கு தம் செலவில் கொண்டுவர ஏற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது.

இருப்பினும் அதற்கு முன்னதாகவே இலங்கை அரசானது திட்டமிட்டு கோபிதாசின் உடலை கூறுபோட்டு , உடல் உறுப்புகளை முன்னரே அகற்றிவிட்டது. இதேவேளை அவர் உடலை பிரித்தானியாவுக்கு கொண்டுவரவேண்டும் என்று மிகவும் திறமையாகச் செயல்பட்டு, கடும் பிரயத்தனத்தை மேற்கொண்ட மருத்துவர் இந்து அக்காவை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் தொடர்ந்தும் பல சேவைகளை ஈழத் தமிழர்களுக்கு ஆற்றிவருகிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


Geen opmerkingen:

Een reactie posten