தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juli 2015

''நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது": மஹிந்தவிடம் கூறிய மைத்திரி

மஹிந்த தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகின்றது
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 12:46.12 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டக் கூடாது என்பதற்காக தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவியன் போர்க் குற்றவியல் விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக தேர்தல் நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்தார்.
போர்க் குற்ற விசாரணை அறிக்கையில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தால் அந்த அறிக்கையை சாதமாகக் கொண்டே மஹிந்த ஆட்சியை கைப்பற்றுவார்.
இது குறித்து மேற்குலக நாடுகள் ஜனாதிபதியை அறிவுறுத்தியிருந்தன.
செப்டம்பர் மாதம் விசாரணை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. சில வேளைகளில் இந்த அறிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் ஊடகங்களுக்கு கசியக் கூடும்.
எனவே விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலை நடாத்தத் தீர்மானித்தார்.
மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய குழப்ப நிலைமைகளை கருத்திற் கொண்டும் என ஜனாதிபதி தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

''நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது": மஹிந்தவிடம் கூறிய மைத்திரி
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:54.17 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, “நீங்கள் வரவில்லை என்றால் மிகவும் நல்லது” என தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்டவிடம் வினவிய போது, இது தொடர்பில் தனக்கு தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் நேற்று இரவு 11 மணிவரையில் மஹிந்த ராஜபக்சவுடனே இருந்தேன். எனினும் அவ்வாறான ஒரு தொலைபேசி அழைப்புகள் வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு கூட்டணியில் வேட்புரிமை வழப்படாதென உடனயாக நாட்டிற்கு தெரியப்படுத்தும் வகையில் அறிவிக்குமாறும், அநுர பிரியதர்ஷன யாப்பாவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு அக்கட்சியில் அல்லது வேறு கட்சியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது ஆதரவாளர்கள் ஊடாக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten