தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 juli 2015

பொது தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்: யோகேஸ்வரன்

மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் தெளிவற்ற நிலையில் மைத்திரி! இந்திய ஊடகம் சாடல்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:09.26 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணி சார்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  போட்டியிடுவதற்கு, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விருப்பத்தை வெளியிட்டிருந்தாலும், இது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த, தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கையை வெளியிட்டார். எனினும் இதுவரையிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைதியாக இருப்பது குழப்பகரமான சூழ்நிலையை அதிகரித்திருப்பதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்களில் அந்நிலைமை நன்றாக தெரிவதாக இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஏற்படுத்திய அமைதி புரட்சியை மீண்டும் பின்னோக்கி செல்வதற்கு இடமளிக்க மாட்டேன் எனவும், குடும்ப ஆட்சிக்கும் ஊழல் மோசடிகளுக்கும் மீண்டும் இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி கைது
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:10.18 AM GMT ]
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் நேற்று தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தெல்லிப்பழையை சேர்ந்த சக்திவேல் ராஜ்குமாரன் (வயது -41) என்பவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
119 இலக்கத்துக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் அவரது வீட்டில் இருந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரைபடங்கள், புகைப்படங்கள் என்பவற்றுடன் வங்கிக் கணக்குப் புத்தகங்ளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 04:43.13 AM GMT ]
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.நகரில் பெண்கள் அமைப்புகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றது.
யாழ்.குடாநாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் மேற்படி பெண்கள் அமைப்புக்கள், தங்கள் கன்னங்களில் கேள்வி குறிகளை கீறிக்கொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.


பொது தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்: யோகேஸ்வரன்
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2015, 05:02.08 AM GMT ]
எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி கூடுதலான உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் புதிய அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தெற்கிலே சிங்கள தேசிய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைப்பதற்காக சிங்கள கட்சிகளில் பல தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிகின்றேன்.
கடந்த காலங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு கட்சிகளால் துரத்தப்பட்ட சிலர் பணத்துக்காக புதிய வடிவில் களமிறங்கவுள்ளனர். அவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கான சந்தர்ப்பமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.
எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை 73 சதவீதமான தமிழர்களின் வாக்குகள் உள்ளன. எமது மக்கள் வாக்களிப்பதிலுள்ள ஆர்வக் குறைவின் காரணமாக எமது பிரதிநிதித்துவம் வேறோரு சமூகத்திற்கு செல்கிறது.
கடந்த 2010ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 4226 வாக்குகள் குறைவடைந்திருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முஸ்லிம்களும் ஒரு தமிழனுமே நாடாளுமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். இவ்விடயம் தொடர்பாக எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் சிங்கள கட்சிகளில் பல தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த காலங்களில் நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சியில் போட்டியிடும் தமிழர்களின் வாக்குகளினால் வேறோரு இனத்தவரே வெற்றி பெற்றுள்ளனர் என்பது நாம் அறிந்த உண்மை.
காலம் காலமாக நாம் விட்ட தவறினை இந்த தேர்தலில் திருத்திக் கொள்ள வேண்டும். தேசிய அரசியலில் சிங்கள கட்சிகளிடையே நடைபெறும் மாற்றங்கள் காரணமாக இம்முறை தனிப் பெரும்பான்மையோடு ஒரு அரசாங்கம் அமைவது சந்தேகமாவுள்ளது.
இந்த நிலையில் புதிதாக அமையப்போகும் தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் தேவைப்படும். இந்நிலையில் தமிழ் மக்கள் அதிகபடியாக வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குவதற்காக பேரம் பேசுவதனுடாக எமது இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும்.
எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் அபிவிருத்திகளில் புறக்கணிப்பதற்கு இடமளிக்க முடியாது கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்கு சென்ற வேறு இனத்தவர்கள் எமது பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.
அதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த எம்மவர்களும் துணைபோயுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் விதவைகள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்பு 130க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
பல பிள்ளைகள் தமது தந்தையாரைத் தேடித் திரிகின்றார்கள். எனது அலுவலகத்திலே பிள்ளைகளோடு தாய்மார் தினமும் வருகின்றார்கள். இது எமது பிரதேச மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினைகளாக காணப்படுகிறது.
செங்கலடிப் பிரதேசத்தில் தான் அதிகமானவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட பெரும்பாலான பிள்ளைகள் தந்தையாரை இழந்தவர்களாகியிருக்கின்றார்கள். எமது உறவுகளைக் கடத்தியவர்கள் கடந்த அரசாங்கத்தில் சகல சுகபோகங்களையும் அனுபவித்து சொகுசு வாகனங்களில் திரிகிறார்கள்.
பல சௌகரியங்களை கடந்த காலங்களில் அனுபவித்தார்கள். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவிருக்கிறார்கள். ஆனால் கணவனை இழந்த நிலையில் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று அழுத குரலிலே கடத்தப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னிடம் கூறினார்கள்.
இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடத்தப்பட்டவர்கள் சார்பில் ஆராய்ந்து வருகிறது. யார் கடத்தினார்கள்? யார் இந்த அநியாயங்களைச் செய்தார்கள் என மக்கள் சாட்சியமளிக்கத் தயாராக விருக்கிறார்கள்.
 மக்கள் ஊடாக அவர்களை நீதியின் முன் நிறுத்தவிருக்கிறோம். எமது மக்களுக்கு நடந்த அநீதிகளைத் தட்டிக் கேட்பவர்களாக நாங்கள் இருக்கின்ற காரணத்தினால் இனியும் நாங்கள் பொறுமையாகவிருக்க முடியாது” என்றார்.
சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் புனரமைப்பு
சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சங்கத் தலைவர் எஸ்.திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி, செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.கங்காதரன்,
கரையோரம் பேணல் திணைக்களத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கோகுலதீபன், கிராம சேவை உத்தியோகத்தர் நிலாம்சன் குருஸ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.விவேகானந்தன், பிரதேச சபை தொழில் நுட்ப உத்தியோகத்தர் எஸ்.தயாளன், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 சுவிஸ் அன்பே சிவம் நிகழ்வில் சீ.யோகேஸ்வரன்
பால்ச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் நிகழ்ச்சித் திட்டத்தின் பத்து இலட்சம் ரூபாய் மற்றும் மக்கள் பங்களிப்பு இரண்டரை இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது அரசியல் பணி மற்றும் சமூக பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பத்து வருடமாக வாகரை பிரதேச செயலாளராக கடமையாற்றிய பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.ஆர்.இராகுலநாயகி மற்றும் அண்ணாவியார் செல்லத்தம்பி, சமாதான நீதவான் ப.கதிரமலை ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பால்ச்சேனை கிராமத்தில் வசிக்கும் வறிய பெண்ணின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் முகமாக சுயதொழில் உதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் சிறுதொகைப் பணத்தினை வழங்கி வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyHTbSUeu2J.html

Geen opmerkingen:

Een reactie posten