அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. வெளிப்படையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான பொறிமுறைமைகளை அமுல்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர் பிரட் மாசோன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால் சில புலம்பெயர் அமைப்புக்கள் தடை செய்பய்பட்டுள்ளதாகவும், அதில் சில அவுஸ்திரேலியாவில் இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அவுஸ்திரேலிய சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா ஆதரிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் நல்லிணக்கத்திற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/70476.html
Geen opmerkingen:
Een reactie posten