[ புதன்கிழமை, 21 மே 2014, 02:19.55 PM GMT ]
யாழ். அரியாலையில் பெண்ணொருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இன்று பகல்வேளையில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த சுந்தரம் இராசம்மா (வயது 65) என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வயோதிபப் பெண்ணின் மகள் வெளியே சென்றிருந்த சமயம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் எனவும் வீட்டிலிருந்த நகைகள் திருடப்பட்டிருக்கின்றன எனவும் தெரியவருகிறது.
குறித்த பெண்ணை வீட்டின் ஜன்னலுடன் கட்டிவைத்து, அவரது காதை அறுத்து தோட்டை எடுத்துள்ளனர்.
பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என அயலவர்கள் தெரிவித்தனர்.
சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்.பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZms7.html
Geen opmerkingen:
Een reactie posten