அன்றைய தினத்தில், அமெரிக்க விமானப்படை, தமது யூ- 2 உளவு விமானத்தை பயன்படுத்தி, அதி ரகசிய உளவு பார்த்தல் ஆபரேஷன் ஒன்றை நடத்தியிருக்கிறது. இந்த உளவு விமானம் எங்கே அனுப்பப்பட்டது என்ற விபரம் வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்கா மேற்கு, கலிபோர்னியா மேலாக பறந்து சென்றிருக்கிறது. இந்த விமானத்தின் உளவு பார்க்கும் கருவிகளில் இருந்து வெளியான சிக்னல்களே, பயணிகள் விமானங்களை கட்டுப்படுத்தும் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவர் கம்ப்யூட்டர்களை ஜாம் பண்ணியிருக்கிறது என்பதை நேற்று பென்டகன் உறுதி செய்துள்ளது.
யூ- 2 உளவு விமானத்தின் சிக்னல்களால், ஏர்-ட்ராபிக் கம்ப்யூட்டர்கள் செயலிழந்த உடனே, ஒரு பேக்-அப் சிஸ்டம் தாமாகவே கிக்-இன் செய்து ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் கம்ப்யூட்டர்களை இயக்கியது. ஆனால், அது மட்டுப்படுத்தப்பட்ட செயல்பாடு உடைய சிஸ்டம். இதனால், அந்த நிமிடத்தில் அமெரிக்கா மேற்கிலுள்ள 4 மாநிலங்களின் (மத்திய மற்றும் தெற்கு கலிபோர்னியா, தெற்கு நெவாடா, தென்-மேற்கு யுடா மற்றும் மேற்கு அரிசோனா) வான் பகுதிகளில் ஏற்கனவே பறந்து கொண்டிருந்த விமானங்களை மட்டும் கன்ட்ரோல் செய்ய முடிந்தது. புதிய விமானங்களை அந்த வான் பகுதிக்குள் அனுமதிக்காத காரணம் அதுதான். ஆக மொத்தத்தில் தனது நாட்டு ராடர் செவையை முடக்கிவிட்டு வேவுப் பணியில் இறங்கியுள்ளது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம்.

Geen opmerkingen:
Een reactie posten