முன்னால் போராளிகளின் நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி
இவர்கள் மத்தியில் உரையாற்றிய கட்டளைத் தளபதி மேலும் தெரிவித்ததாவது கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பிரதேசங்களில் தற்கொலை, சிறுவயதுத் திருமணம், சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவனை, பாடசாலையை விட்டு இடைவிலகல், ஆலயங்களின் உண்டியல்களை களவாடுதல், ஆலயங்களுக்கு போகாமை, சிறுவர் துஷ்பிரயோகம், மது பாவனை, போதைவஸ்துப் பாவனை போன்ற சமூகச் சீரழிவுகள் அதிகரித்து வருகின்றன. இவைகளிலிருந்து இளைஞர், யுவதிகளை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இந்து ஆலயங்கள், இந்துக் குருமார்கள், இந்து சமூக நிறுவனங்களுக்கு உண்டு.
பாடசாலையை விட்டு மாணவர்கள் இடைவிலகுவதற்கு அடிப்படை காரணம் வறுமையாகும். அந்த வறுமையைப் போக்க நாம் பாடுபட வேண்டும். ஆன்மிக ரீதியாக இளைஞர், யுவதிகளுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்புண்டு. வெளிநாட்டு நிறுவனங்கள் சில இங்கு இளம் யுவதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி இயக்குதல், அதில் புகைப்படம் எடுத்தல் போன்ற பயற்சியை நடத்தியதாக அறிய முடிகின்றது. இது போன்றவைகளில் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும். புனர்வாழ்வு பெற்ற தமிழ் இளைஞர், யுவதிகளை புறக்கணிக்காமல் அவர்களை சமூகத்துடன் இணைத்துச் செயற்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை செய்து கொடுக்க வேண்டும். சில அதிகாரிகள் அவர்களுக்கு உதவும் விடயங்களில் பாரபட்சம் காட்டுவதாக தெரியவருகின்றது. அவ்வாறில்லாமல் அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம், காணி வழங்குதல், அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மேலும், மீள்குடியேறிய தமிழ் குடும்பங்களின் நலன்களில் அக்கறையுடன் செயலாற்ற வேண்டும். இங்குள்ள தமிழ் மக்களுக்கு உதவப் போவதாக தெரிவித்து வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுகின்றன. ஆனால், அந்த நிதி எதுவும் இந்த தமிழ் மக்களுக்காக செலவழிக்கப்படவில்லை. நாம் காக்கிச்சட்டை அணிந்திருப்பது இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்காகவே அன்றி, யாரையும் அச்சுறுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். தேசத்திற்கு அச்சுறுத்தல் வருகின்றபோது, எமது கடமையைச் செய்வோம்.
அதற்காகவே நாம் இந்தக் காக்கிச்சட்டையை அணிந்துள்ளோம். சில தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இராணுவத்தினர் வேலைவாய்ப்பு வழங்க முயற்சிக்கும்போது அதை தடுப்பதுடன், எங்களை விமர்சிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் யாராயினும் அவர்களுக்கு உதவி வருகின்றோம். ஏனைய சமூகங்களைப் போல தமிழ்ச் சமூகமும் வாழ வேண்டும். தமது சமூக கலாசார விழுமியங்களை பாதுகாத்து ஆலயங்கள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதுடன், சமூகச் சீரழிவுகளிலிருந்து வருங்கால சந்ததியைப் பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும் – என்றார். 

http://www.jvpnews.com/srilanka/68944.html
முல்லைத்தீவில் இராணுவத்தில் சேர்ந்த மனைவி கொலை! கணவன் தற்கொலை…
இருவருடைய சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் பற்றி புதுக்குடியிருப்பு பொலிசார் தனக்கு அறிவித்ததை அடுத்து, சடலங்களைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை செய்ததாக யாழ் மாவட்ட பதில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சின்னையா சிவரூபன் தெரிவித்தார். மனைவியின் கழுத்து அறுத்து துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், கணவன் வீட்டின் பின்புறமுள்ள உயர்ந்த மரம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
முப்பது வயதுடைய அருமைநாயகம் அருள்ராஜ், அவருடைய மனைவியாகிய அருள்ராஜ் ஜெயக்குமாரி ஆகிய இருவருமே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவம் சேர்த்தபோது, அருள்ராஜின் மனைவியும் சேர்ந்ததாகவும், அதனை அவர் விரும்பவில்லை என்றும், மனைவி வீட்டிற்கு வந்திருந்த போது ஏற்பட்ட தகராறையடுத்து இந்தச் சம்பவம் நடந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/68933.html
Geen opmerkingen:
Een reactie posten