[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 11:46.20 PM GMT ]
தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக நேற்று ஞாயிறு மட்டக்களப்பில் நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்களுடனான கலந்துயைராடலின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்துக் கூறுகையிலேயே சுரேஸ் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் நாட்டு அரச வழக்கறிஞர்கள் சாட்சிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்தேயாக வேண்டும்.
இன்று இலங்கை அரசுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் விசாரணை நடைபெறாவிட்டால் வெளிநாட்டில் விசாரணை நடைபெறும். விசாரணையின் பின்னர் பல்வேறுபட்ட தீர்மானங்கள் நிறைவேற்;றப்;படும். அந்த தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான தீர்மானங்களாக இருக்காது.
தீர்மானத்தின் விளைவாக பிரித்தானியா, அமெரிக்கா போன்ற சில நாடுகள் இலங்கைக்கு எதிராக பயணத்தடை மற்றும் பொருளாதாரத் தடை போன்றவற்றை மேற்கொள்ளும். இது அரசுக்கு பெரும் பாதிப்பாக அமையும். சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தி இலங்கையில் ஒரு அமைதிச் சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென்னாபிரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கினால் சிறந்த ஒரு நிலையை உருவாக்க முடியும்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் தென்னாபிரிக்காவின் அனுசரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் கூறிய கருத்துக்களில் இருந்து தெரிகின்றது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமாகவே தீர்வைப் பெறவேண்டும் என அமைச்சர் கெஹெலிய கூறுகின்றார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவினால் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படமாட்டாது என்பது எமக்கு தெரியும். எமது கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும் நாடாளுமன்ற தெரிவுக்குழு செத்துப்போய் விட்டது என கூறினார். இலங்கை அரசின் மீதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சிறீலங்கா அரச அதிகாரிகளுக்கும் இராணுவத்துக்கும் எதிராக யேர்மன் அரசு சாட்சிகள் சேகரிப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014, 11:53.56 PM GMT ]
ஈழத்தமிழர்கள் மீது முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது சர்வதேசப் போர்ச் சட்ட விதிமுறைகளை மீறி, மானிடத்துக்கு எதிரான பாரிய குற்றங்களை சிறீலங்கா பேரினவாத அரசு இழைத்திருந்தது.
இந்த மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா அரச உயர்மட்ட அதிகாரிகள், இராணுவத்தினர் ஆகியவற்றுக்கு எதிராக சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக தற்போது யேர்மன் அரசாங்கம் தனது அரசதரப்பு சட்டத்தரணிகள் மற்றும் மனிதவுரிமை அமைப்புகள் ஆகியவற்றின் ஊடாகப் போரின் இறுதிக்கட்டத்தில் உயிர்தப்பி யேர்மனுக்குப் புலம்பெயர்ந்து வந்திருக்கும் ஈழத்தமிழர்களிடம் நேரடிச் சாட்சிகளைச் சேகரித்து வருகிறது.
இதன் அடிப்படையில் சிறீலங்கா அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான முயற்சியில் யேர்மன் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அந்தவகையில் இந்த வேலைத்திட்டத்தை செம்மையாக முன்னெடுப்பதற்காக யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையால் சாட்சிகள் வழங்குவோருக்கான பாதுகாப்பும் இரகசியமும் பேணப்பட்டு, குறித்த மனிதவுரிமை அமைப்பு மற்றும் சட்டத்தரணிகளோடு தொடர்புகளையும் சந்திப்புக்களையும் ஏற்படுத்தும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன், சாட்சிகளை வழங்கும் எமது உறவுகளுக்கான இதர ஒத்துளைப்புக்களையும் வசதிகளையும் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை செய்துவருகிறது.
இனவழிப்பில் ஈடுபட்டுவரும் சிறீலங்கா அரச தரப்புகளுக்கு எதிராக சரியான முறையில் சாட்சிகள் அமையும் பட்சத்தில் எதிர்காலத்தில் யேர்மனிக்குப் பயணம் செய்யும் சிறீலங்கா அரச அதிகாரிகள் பாரதூரமான சட்டச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.
ஏற்கனவே யேர்மனியின் முன்னாள் துணைத்தூதுவராகப் பணியாற்றிய போர்க்குற்றவாளி மேயர் ஜெனரல் ஜெகத் டயஸ் பல்வேறு சட்ட ரீதியான அழுத்தங்கள் தாங்கமுடியாமல் நாட்டுக்குத் திரும்பிச் சென்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆகவே, எமது இனத்தை அழித்துவரும் சிறீலங்கா அரச தரப்புக்கு எதிராகத் தங்களது நேரடிச் சாட்சிகளையும் சான்றுகளையும் வழங்கத் தயாராக இருக்கும் எமது உறவுகள் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்:
Geen opmerkingen:
Een reactie posten