தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 mei 2014

பிரிவினைவாதம் தொடர்பில் புலிகள் மீது மட்டும் குற்றம் சுமத்தி பயனில்லை!- அமைச்சர் டளஸ் அழகப்பெரும

பிரிவினைவாதத்தை பாடசாலைக்குள் ஆரம்பித்து வைத்த சகல அரசியல்வாதிகளும் குற்றவாளி கூண்டிலில் ஏற வேண்டும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தின் முதல் அத்தியாயத்தின் குற்றங்களை விடுதலைப் புலிகள் மீது சுமத்தி பயனில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு என்ற வகையில் இணைய வேண்டுமாயின் தனித்து பயணிக்க முடியாது.
மதங்களின் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் பாடசாலைகளை ஏற்படுத்தி, பாடசாலைகளுக்கு பிரிவினைவாதத்தை கொண்டு சென்ற முறைமையை மாற்றி சரியான பாதையில் பயணிக்க வேண்டும்.
நாடு என்ற வகையில் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். தனித்து செல்ல முடியாது. மதங்களின் அடிப்படையில் தனியான பாடசாலைகள் இருக்கின்றன.
பாடசாலைகளிலும் நாங்கள் பிளவுப்பட்டு உள்ளோம். பிரிவினைவாதம் பாடசாலைகளிலேயே ஆரம்பமாகியது.
இதற்கு வித்திட்ட சகல அரசியல்வாதிகளும் குற்றவாளி கூண்டில் ஏற வேண்டும். இந்த பயணத்தை சரியான பயணமாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten