அமெரிக்காவை எதிர்க்க சீனா முயற்சி
ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு சாங்காயில் நடைபெற்ற போதே சீன ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் அமெரிக்கா இடம்பெறக்கூடாது என அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவின் மூலோபாய போட்டியையும் தலையீடையும் குறைக்க சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளதென சீன ஜனாதிபதி கூறியுள்ளார்.
நம்முடைய பாதுகாப்பு ஒத்துழைப்பை புதிதாக்கி புதிய பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டமைப்பு நிறுவ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிய வலய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற வகையில் மூக்கை நுழைப்பதாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் சீன ஜனாதிபதியின் புதிய அழைப்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmr4.html
Geen opmerkingen:
Een reactie posten