தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 mei 2014

ஏமாறுவது தமிழருக்கும் ஏமாற்றுவது இந்திய அரசியலுக்கும் புதிதா என்ன!?



இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மோடியின் நிலைப்பாடு எவ்வாறிருக்கும்?- ஆய்வாளர் சுதர்மா
இந்தியாவில் வீசிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அலை இலங்கைத் தமிழர் விவகாரத்தில் எவ்வாறு வீசலாம் என கனடாவைச் சேர்ந்த ஆய்வாளர் சுதர்மா கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில், நரேந்திர மோடி அரசாங்கம் இராஜதந்திர அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை நெருக்குதல்களுக்குள்ளாக்கலாம்.
13வது சட்டத்திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு காணி, மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகள் வைத்திருப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், மோடியின் புதிய அரசாங்கம் இலங்கையுடன் நட்பு ரீதியாகவே அணுகலாம்.
குஜராத்தின் முதல்வராக இருக்கும் போதே பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு மிகவும் நெருக்கமான நல்லுறவை ஏற்படுத்திய நரேந்திர மோடி, இலங்கை விவகாரத்திலும் அவ்வாறானதொரு நட்பையே காட்டுவார் என்பதையும்,
அந்த நட்புக்கலந்த இராஜதந்திர அழுத்தங்கள் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் 13வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கு அமைவாக மாகாணசபைகள் அதிகாரங்களை, குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணங்கள் தம்வசம் வைத்திருப்பதற்கான நெருக்குதலை இலங்கைக்கு வழங்குதாகவே இந்தியாவின் அதிகபட்ச நிலைப்பாடு இருக்கலாம் என்றும்,
இந்த அரசு அறுதிப் பெரும்பாண்மை பெற்ற ஒரு அரசாக இருப்பதால் தமிழ்நாட்டு அரசியலாளர்கள் மோடியுடனான நட்புரீதியான உறவின் மூலமாக இத்தகைய விடயங்களைச் சாதிக்க முடியும் என்பதையும் இன்று லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து கலந்து கொண்ட சுதர்மா அவர்கள் தரவுகளோடு எடுத்துரைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmr5.html

Geen opmerkingen:

Een reactie posten