[ புதன்கிழமை, 21 மே 2014, 03:11.41 PM GMT ]
காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, நேற்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்போதே 13.590 பொதுமக்கள் மற்றும் 5000 பாதுகாப்பு படையினர் காணாமல்போயுள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவிக்கையில்,
ஆணைக்குழு எப்போதும் சுதந்திரமாக மற்றும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது.
http://www.pcicmp.lk/ என்ற இந்த இணையத்தளத்தில் மூன்று மொழிகளில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், முறைப்பாடுகளையும் இணையத்தளத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். அதற்கான படிவங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmt0.html
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள்
[ புதன்கிழமை, 21 மே 2014, 03:00.12 PM GMT ]
இன்று கைலாசபதி அரங்கில் ஒன்று கூடிய மாணவர்கள், யுத்தத்தின்போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதால் நாளையும் நாளை மறுதினமும் பல்கலைக்கழக விரிவுரைகளை புறக்கணிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்காத நிலையில் தமக்கு விடுமுறை வழங்கப்பட்டமை ஏன் என யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சுவரொட்டிகள் கடந்த காலங்களில் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களான தமக்கு அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் மூலம் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குறிப்பிட்டு, அதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் விரிவுரைகளை புறக்கணிக்கவுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதம் மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmtz.html
Geen opmerkingen:
Een reactie posten