நாட்டில் உள்ள பெண்கள் பஸ்களில் செல்லவும் வீடுகளில் தனிமையில் இருக்கவும் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெண்களுக்கு எதிராக இவ்வாறான வன்கொடுமைகளில் ஈடுபடும் நபர்கள் உண்ணும் உணவில் விஷம் உள்ளதா தெரியவில்லை.
முன்னைய காலங்களில் வீடுகளில் ஏற்படும் பிரச்சினைகள் வெளியில் தெரிவதில்லை. அவை வீடுகளிலேயே தீர்க்கப்பட்டன. அந்த நிலைமை தற்போதில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முழு உலகத்திற்கு தெியவருகிறது. பெண்களுக்கு எதிராக வன்முறைகள், பாலியல் வல்லுறவுச் சம்பங்கள் தொடர்பான செய்திகளை அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவருவதை காணமுகிறது.
உலகில் பல நாடுகளில் இப்படியான பல சம்பவங்கள் நடக்கின்றன. பெண்களிலும் இப்படியானவர்கள் இருக்கின்றனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFSWLYhr7.html
Geen opmerkingen:
Een reactie posten