இலங்கையின் உண்மை நிலைமைகளை உங்கள் நாடுகளுக்கு தெரியப்படுத்துங்கள் - வெளிநாட்டு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 09:48.59 AM GMT ]
இலங்கைக்கான கொங்கே தூதுவர் பிலிக்ஸ் நகோமா ( வாசஸ்தலம் புதுடெல்லி), ஆர்ஜன்டீன தூதுவர் ராகுல் இக்னாசியோ குவாஸ்டாவினோ( வாசஸ்தலம் - புதுடெல்லி) தென் கொரியா தூதுவர் சாங் வேங் சாம், பிலிப்பைன்ஸ் தூதுவர் வின்சேன்டி விவியன்சியோ டி பண்டில்லோ ( வாசஸ்தலம் டாக்கா), பாலஸ்தீன தூதுவர் சுஹைர் அஹமடல்லா சாஹிட், எல்- சல்வடோர் தூதுவர் கில்ஹெரிமோ ரூபியோ பன்நெஸ் ( வாசஸ்தலம் புதுடெல்லி) ஆகியோர் இலங்கைக்கான தூதுவர் நியமனக் கடிதங்களை இன்று ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இலங்கைகக்கான தூதுவர்கள், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை மக்கள் தொடர்பிலான நற்செய்திகளை தமது நாடுகளில் மதிப்புக்குரிய தலைவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை கொங்கே, ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவு தொடரும் இலங்கைக்கான அந்நாட்டின் தூதுவர் நகோமா, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
தனது பதவிக்காலத்தில் குறிப்பாக வர்த்தக துறையில் புதிய துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஆர்ஜன்டீனா தூதுவர் குவாஸ்டாவினோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதிய வர்த்தக முதலீகள், இரு நாடுகளுக்கும் இடையிலான இருத்தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தென் கொரிய தூதுவர் வோங் சாம் கூறியுள்ளார்.
இலங்கையில் போருக்கு பின்னரான அபிவிருத்தி குறித்து தூதுவர்களுக்கு விளக்கிய ஜனாதிபதி, இலங்கையில் பல பகுதிகளுக்கு சென்று மக்களுடன் பேசி கீழ் மட்டத்தில் இருந்து உண்மை அறிந்து நிஜத்தை தமது நாடுகளுக்கு சென்று தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியேமால் பெரேரா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyFSWLYhr4.html
வெசாக் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பான் கீ மூன்
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 09:59.15 AM GMT ]
பௌத்தர்கள், உலகின் பொது நன்மைக்காகவும் மனித குலத்தின் சகல நன்மைகளுக்காகவும் உறுதிப்பூண வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
வெசாக் பண்டிகை நாளில் பௌத்தர்கள் புத்த பகவானின் பிறப்பை நினைகூருகின்றனர். பல மில்லியன் பௌத்தர்களுடனும் பௌத்தர்கள் அல்லாதவர்களுடன் புத்தரின் வாழ்க்கை அவரது போதனைகளை பிரதிபலிப்பதில் ஐ.நா இணைந்து கொள்கிறது.
சகல உயிர்களுக்கும் அமைதி, கருணை, அன்பு என்ற புத்தரின் போதனையானது தமது மனங்களை திறப்பதுடன் சகல மனித குடும்பங்களுக்கு இது தேவையானது.
காலத்தால் அழியாத இந்த போதனைகள் நாடுகளின் அரசாங்கங்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வழிக்காட்ட உதவ முடியும்.
இதன் மூலம் அவர்கள் உலகில் நாம் எதிர்கொள்ளும் பரந்த சவால்களான அமைதி, பாதுகாப்பு, நமது சூழல் பாதுகாப்பு என்பவற்றுக்கு தீர்வு காணும் முயற்சிகளை ஊக்குவிக்க முடியும்.
மக்கள் சுயநலங்கக்காக அல்லாமல் உலக சமூகத்தின் உறுப்பினர்களாக செயற்பட வேண்டும் எனவும் பான் கீ மூன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFSWLYhr5.html
Geen opmerkingen:
Een reactie posten