கிளிநொச்சியில் புலிகள் முகாமிட்ட காணிகள் அபகரிப்பு…
கிளிநொச்சி நகரத்தில் உள்ள சில காணிகளை தெற்கிலிருந்து வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் கையகப்படுத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான காணி என்று கூறியே குறித்த காணிகளை கையகப்படுத்தியிருப்பதாக காணிக்குச் சொந்தமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தக் காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை. இதன் உரிமையாளர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோதும் குறித்த காணிகள் புலிகளுக்குச் சொந்தமானவை என்றும் அவைகளை புலிகள் பணம் கொடுத்து வாங்கியதாகவும் கூறி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க மறுக்கப்பட்டு வருகிறது.
குறித்த காணிகளில் பெரும்பான்மையினர் வர்த்தக கட்டிடங்களையும் வீடுகளையும் அமைத்து வருகின்றனர். உரிமையாளர்கள் தொடர்ந்தும் காணிகளை மீளத் தருமாறு கோரி வருகின்றனர். இதேவே இதுவரையில் உரிமை கோரப்ப்படாத சில காணிகளையும் இவ்வாறு பெரும்பான்மையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி நகரத்தை அண்டிய சில பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக தொடர்ந்தும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அந்தப் பகுதி மக்கள் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் பின் பகுதி, தமிழீழ நீதிமன்றம் அமைந்திருந்த இடத்தின் பின் பகுதி முதலியவையே இவ்வாறு அனுமதிக்கப்படாதுள்ளன. குறித்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தமது காணிகளை இராணுவத்தினர் மீளத் தந்து மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/68220.html
ஆயுதக்குழுக்களை வளர்த்து இந்தியா! தமிழர் தீர்வில் நாட்டமில்லை..
ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் வி.மகாலிங்கத்துக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
ஒரு குழுவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்தியா எல்லா ஆயுதக் குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியிருந்தது. இதனால் குழு மோதல்கள் இடம்பெற்றன. இதன் பின்னணியில் இந்தியா இருந்தது எனவும் தெரவித்தார். குழுக்களை மோதவிட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா, தமிழரின் ஆயுதப் போராட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்மக்கள் படும் துன்பங்கள், நிர்க்கதி நிலைக்கு இந்தியா தான் காரணம் எனவும் குறிபபிட்டார்.
இந்திய அணுகு முறையினால் ஏற்பட்ட அழிவுகளால் தான் தமிழர்களுக்கு இந்நிலை ஏற்பட்டது. எனவே இந்திய மத்திய அரசிடம் தமிழரின் ஆதங்கத்தை எடுத்துக் கூறுங்கள். ஈழத்திலுள்ள தமிழர்கள் இந்திய நாட்டைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை மத்திய அரசிடம் கூறவேண்டும் என்றார்.
இறுதிப் போரில் தமிழ்மக்களை இந்தியா நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும். போராட்டத்தையும் நிறுத்தியிருக்க முடியும். இறுதிப்போரில் தமிழ் மக்கள் இழக்க முடியாத வற்றை எல்லாம் இழந்து விட்டனர். அவ்வாறு மக்கள் அனைத்தையும் இழந்த பிற்பாடும் கூடக் காத்திரமான நடவடிக்கையை இந்தியா இதுவரை எடுக்கவில்லை எனவும் குறிபட்டார்.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்பும் இந்தியா பின்வாங்குவது தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்தியாவை நாம் நம்புகின்றோம். ஆனால் இந்தியா தமிழர்களை ஏமாற்றி விட்டது. ஈழத்தமிழரின் பிரச்சினை ஜெனிவா வரை சென்றுள்ள நிலையில் இந்தியா நடந்துகொள்ளும் விதம் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்.
http://www.jvpnews.com/srilanka/68223.html
Geen opmerkingen:
Een reactie posten