யாழ்.பல்கலைக்கழகம்? மூடப்பட்டதன் பின்னனி…
யாழ்.பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். மூடப்படுவதற்கான உண்மையான காரணம் தெரிவிக்கப்படாதபோதும் மாணவர்களது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கற்றல் செயற்பாடுகள் குறிப்பிடப்படும் திகதிவரை நிறுத்தப்படுகின்றன என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார் என்று மாணவர் ஒன்றியத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் மே 17,18 ஆம் திகதிகளில் போரில் இறந்தவர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்திவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக மாணவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த வருடம் நவம்பர் மாதமும் இவ்வாறு காரணம் இன்றி பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/68244.html
யாழ்.தாவடி பகுதியில் ஆயுதங்கள்
யாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம் செவ்வாய்க்கிழமை (06) உறுதிப்படுத்துள்ளது.
குறித்த காணியினை காணி உரிமையாளர்கள் துப்புரவு செய்தபோது, ஆயுதங்கள் இருப்பதைக் கண்ணுற்று 511 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தினைத் தொடர்ந்து இராணுவத்தினர் அவ்விடத்திற்குச் சென்று குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/68252.html
Geen opmerkingen:
Een reactie posten