தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 mei 2014

இராணுவத்தினர் தமது அதிகாரத்தை கொண்டு தமிழர்களின் காணிகளை பறிக்கின்றனர்: சிவாஜிலிங்கம்


இணக்கப்பாடின்றி முடிவடைந்த இலங்கை - இந்திய மீனவர் பேச்சுவார்த்தை
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 03:39.24 PM GMT ]
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில், இருநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் இன்று காலை ஆரம்பமான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்காக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி 19 மீனவர்களும், 8 அதிகாரிகளும், இலங்கை மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 20 உறுப்பினர்களும், 10 அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், புதுடில்லி வெளியுறவுத் துறை அமைச்சின் இணைச் செயலாளர் சுஜித்ரா துரை மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி, அதன் அடிப்படையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இணக்கம் எட்டப்பட வேண்டும் என இந்திய மீனவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
இரு தரப்பினருக்கிருடையில் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் தொடர்ந்தும் ஆலோசனை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றிருந்த பேச்சுவார்த்தை எந்தவித தீhமானங்களும் இன்றி நிறைடைந்திருப்பதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் பேச்சாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இந்திய மீனவர்கள் தங்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு கோரி இருந்தனர்.
எனினும் அவ்வாறு அனுமதிக்க முடியாது என்ற தங்களின் நிலைப்பாட்டில் இலங்கை மீனவர்கள் உறுதியாக இருந்தனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அனுமதித்தால், தங்களின் வாழ்வாதரம் பாதிப்படையும் என்றும் இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கருத்து முரண்பாடுகள் காரணமாக இந்த பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது.
எனவே அதனை அமைச்சரவை மட்ட பேச்சுவார்த்தைகளாக மாற்றி, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதென இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் தமது அதிகாரத்தை கொண்டு தமிழர்களின் காணிகளை பறிக்கின்றனர்: சிவாஜிலிங்கம்
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 04:57.50 PM GMT ]
இராணுவத்தினர் தமது அதிகாரத்தை காட்டி தமிழர்களின் காணிகளை பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக சந்தேசிய என்ற பிபிசியின் சிங்கள சேவை தெரிவித்துள்ளது.
கீரிமலை பிரதேசத்தில் இராணுவத்தினர் 300 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளமையை சுட்டிக்காட்டியே சிவாஜிலிங்கம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஏற்கனவே இராணுவத்தினரால் 6400 ஏக்கர் காணியை இராணுவம் சுவீகரித்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடும் என்று சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten