வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் தாக்குதலுக்கு கட்டளையிட்ட அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை அரசாங்கம் துருக்கிக்கான இலங்கை தூதரகத்தின் இராணுவ இணைப்பாளராக நியமித்துள்ளது.
ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கடந்த வருடம் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் என மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு கட்டளையிட்ட இராணுவ அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை அரசாங்கம் இரகசியமான முறையில் துருக்கிக்கான இலங்கை தூதரகத்தின் இராணுவ இணைப்பாளராக நியமித்துள்ளது.
இந்த இராணுவ அதிகாரி போர்க் குற்றவாளி என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
போர்க்குற்றங்கள் சுமத்தப்படும் நபர்களை மேற்குலக நாடுகளில் தூதரக சிறப்புரிமைகளுடன் பாதுகாப்பாக வைத்திருப்பது ராஜபக்ச அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
போர்க்குற்றம் சுமத்தப்படும் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜகத் டயஸ் ஜேர்மனிக்கான இலங்கையின் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்ததுடன் அவர் மீண்டும் இலங்கை திரும்பி இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
பிரசன்ன சில்வா இங்கிலாந்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சீனாவுக்கான தூதரக அதிகாரியான சுராஜ் பான்ஸஜய நியமிக்கப்பட்டிருந்ததுடன் இந்த பட்டியலில் தற்போது தேசப்பிரிய குணவர்தனவும் இணைக்கப்பட்டுள்ளார்.
ரத்துபஸ்வல சம்பவத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தேசப்பிரிய குணவர்தனவை இராணுவத்தில் இருந்து நீக்கியுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது.
எனினும் பின்னர், அவர் மீண்டும் இராணுவத்தில் இணைக்கப்பட்டு தற்போது தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZlw6.html
Geen opmerkingen:
Een reactie posten