தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 mei 2014

இலங்கை கடல் வழி தீவிரவாதத்தை தடுக்க அவசரமாக புறப்பட்ட இந்திய போர்க் கப்பல்!

கடல்வழி ஊடுருவல்களைத் தடுக்க புதிய பாதுகாப்புத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுவின் மூத்த அதிகாரியான ஜோதி பாசு கடந்த 6ம் நாள் கூறியிருந்தார்.

சிறிலங்காவில் இருந்து கடல் வழியாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வு முகவர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற தகவல் வெளியானதை அடுத்து, இந்தியக் கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
இதன் ஒருகட்டமாக இராமேஸ்வரத்தில் உள்ள கடற்படை இறக்குதுறைக்கு நேற்று மூன்று புதிய போர்க்கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் கடற்படைத் தளத்துக்கு மூன்று புதிய கடற்படைக் கப்பல்கள் வந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய கடற்படை அதிகாரிகள், மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட மறுத்துள்ளனர்.
பாக்கு நீரிணை வழியாக சிறிலங்காவில் இருந்து ஐஎஸ்ஐ புலனாய்வு முகவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்தே இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்தமாதம் 29ம் நாள் சென்னையில் வைத்து, சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முகவரான சாகிர் ஹுசேன் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்,தென்னிந்தியாவில் உள்ள இந்தியப் பாதுகாப்பு நிலைகளை உளவு பார்க்குமாறு பாகிஸ்தான் அதிகாரிகளால் கேட்கப்பட்டிருந்தார்.
குறிப்பாக, கொச்சி கடற்படைத்தளம் மற்றும் விசாகப்பட்டினம் கடற்படைத்தளம் என்பனவற்றை வேவுபார்க்க இவருக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் பணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் என்பனவற்றையும் வேவுபார்க்க இவரை பாகிஸ்தான் உளவுப்பிரிவு அனுப்பியிருந்தது. இதையடுத்தே இந்தியக் கடற்படை பாக்கு நீரிணையில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.
அதேவேளை, கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ முகவரான சாகிர் ஹீசேன் தொடர்பான வழக்கில், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும், இரண்டு அதிகாரிகளின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. சித்திக் மற்றும் ஷா ஆகிய பெயர்களையுடைய பாகிஸ்தான் அதிகாரிகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/68631.html

Geen opmerkingen:

Een reactie posten