பள்ளிக்கூடம் செல்ல அஞ்சும் ஈழத் தமிழ் சிறுமிகள் : இலங்கை ராணுவத்தினர் பாலியல் தொந்தரவு !
அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளிநொச்சிக்கு கல்வி கற்கவும் மாணவிகள் வந்து செல்கின்றனர். அப்படி மாணவிகள் செல்லும் போது பாலியல் வார்த்தைகளை பயன்படுத்தி சீண்டுவது, மாணவிகளைக் கண்டதும் தமது கீழாடைகளை கழற்றிவிட்டு நிற்பது போன்ற வக்கிரங்களில் ஈடுபடுவதை இலங்கை ராணுவத்தினர் வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர். இதனால் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீடுகளுக்குள்ளேயே தமிழ் சிறுமிகள் முடங்கிக் கிடக்கும் நிலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten