[ புதன்கிழமை, 07 மே 2014, 03:50.56 PM GMT ]
வடமாகாணத்தின் தலைபட்டணமாக விளங்கப்போகும் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள “அமதிக்கரங்கள்” அவயவங்களை இழந்தவர்களுக்கான லிபாரா நல்வாழ்வு மையம் ஓர் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது.
இலங்கையில் சுனாமி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவித்துள்ளது
இதில் வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இயற்கையினாலும், செயற்கையினாலும் ஊனமுற்று அவயவங்களை இழந்தவர்களுக்கு பல பிரிவுகளில் சேவை வழங்கப்படவுள்ளது.
உடல் நலவாழ்வு, உள நலவாழ்வு, பொருளாதார நலவாழ்வு, கல்வி நலவாழ்வு, ஆன்மீக நலவாழ்வு போன்ற பிரிவுகளில் உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக உதவிகள் வழங்கப்படுவதையிட்டு நான் பெருமை அடைகின்றேன் என வடமாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சர் கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் “அமதிக்கரங்கள்” மையத்தினை திறந்து வைத்து பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் மாங்குளம் பிரதான ஏ-9 பாதையில் அமைந்துள்ள “லிபாரா நல்வாழ்வு மையம்” திறந்துவைக்கப்பட்டது.
இதில் அமல மரித் தியாகிகள் சபையை சேர்ந்த வண. பிதா ஜீவேந்திராபோல் (அமதி நிதி வழங்குனர்), வண பிதா போல் நட்சத்திரம் (வடமாகாண அமதி முதல்வர்), திரு கிளாரன்ஸ் ( லிபாரா இலங்கை பணிப்பாளர்), மன்னார் மேலதிக அரசாங்க அதிபர், மெத்தா நிறுவன இயக்குனர், வைத்திய கலாநிதி பணாகமுவ,செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிபுணர் திரு பேணாட் ( ஜக்கியராட்சியம் ) 50க்கும் மேற்பட்ட அமதி சபை குருக்கள், கன்னியர்கள், உடல் ஊனமுற்றோர், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என 250க்கும் மேற்பட்டோர் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.
இவ்நிறுவனத்தில் மன்னார் வைத்தியசாலையில் இயங்கும் “மெத்தா” செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனம் தமது இலவச சேவையை லிபாரா நிதி ஒத்துழைப்புடன் நாளாந்தம் சேவையாற்றவுள்ளது.
மாங்குளம் மையப் பகுதியில் அமைந்துள்ளமையினால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, துணுக்காய், வவுனியா, வெள்ளாங்குளம், பூனகரி போன்ற பிரதேசங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் இவ் நலவாழ்வு மையத்திற்கு சமூகம் அளித்து தமது தேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மெத்தா நிறுவன தொடர்பு அதிகாரி திரு சின்கிளேயர் பீற்றர் தெரிவித்துள்ளார்.
யுத்தம், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்கு பத்தாயிரம் கோடி: ஐரோப்பிய ஆணைக்குழு
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 12:23.14 AM GMT ]
எதிர்வரும் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்த நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையானது ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டுள்ள ஒரு நாடு. அந்த வகையில் இங்கு யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் வீடுகள் மற்றும் 200 பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
அதற்கு மேலதிகமாக அவ்வப்பிரதேசங்களில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப வேறு திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, திஸ்ஸ விதாரண, ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர்கள் நியோமால் பெரேரா, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten