[ வியாழக்கிழமை, 08 மே 2014, 02:17.31 AM GMT ]
விடுதலைப் புலிகள் அமைப்பின் யாழ் மாவட்டத் தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. அனைவரும் மாவீரர்களே.
குருநாகலில் பொலிஸ் கான்ஸ்டபிள் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரிக்க 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவை தாக்குதல் மையமாகக் கொண்டு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் இலங்கையையும் மாலைதீவையும் பயன்படுத்துவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்களது சகோதரனான யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதியின்மையினாலேயே அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்புக்கு சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது.
எனினும் பூதவுடலை வன்னிக்கு எடுத்துவர பணமின்மையால் கடந்த சில நாட்களாக கொழும்பில் பிரேத அறையில் அச்சிறு குழந்தையினது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் பற்றி அறிந்த கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை தையற் தொழிற்சாலை பெண்பணியாளர்கள் இணைந்து திரட்டி வழங்கிய பணத்தை அடுத்து பூதவுடல் சொந்த இடத்திற்கு நேற்று எடுத்துவரப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் யுத்த அவலங்களை தாங்கிய பெண் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கான்ஸ்டபிள் சுட்டுக் கொலை: 10 பொலிஸ் குழுக்கள் நியமனம்- ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 02:25.09 AM GMT ]
கடந்த 6ம் திகதி அதிகாலை குருநாகல் சோதனைச் சாவடியில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் கடத்தப்பட்டு காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரிடம் பொலிஸார் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செயவதற்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை அப்பகுதியில் உள்ள 20 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை
எதிர்காலத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்லாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடமைக்கு செல்லும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஆயுதங்களை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணியை இடைநிறுத்த முடியும் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்று தெரிவித்துள்ளார்.
நிறுவன ஒழுக்கக் கோவைக்கு அமைவான வகையில் ஆயுதத்தை எடுத்துச் செல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான துணைப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணியை இடைநிறுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பாற்ற நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் தொடர்பிலான வழிகாட்டல்களை பின்பற்றத் தவறும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான துணை அத்தியட்சகர்களுக்கு எதிராக பிரதிப் பொலிஸ் மா அதிர்கள் தண்டனை விதிக்க முடியும் என அறிவித்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் கடமையில் ஈடுபடுவதனால் அதிகளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, ஆயுதங்கள் எடுத்துச் செல்வது குறித்த சட்டம் எதிர்காலத்தில் கடுமையாக பின்பற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையையும் மாலைதீவையும் இந்திய புலனாய்வு பிரிவு கண்காணிப்பு
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 02:42.10 AM GMT ]
இதனையடுத்து இந்த இரண்டு நாடுகளையும் கண்காணிக்கும் நடவடிக்கைகளை அவர்களை மேற்கொண்டுள்ளனர் என்று தெ டைமஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கை பிரஜையான சாகீர் ஹுசைன் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்துக்கு உளவு பார்க்கும் போது தமிழகத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் மீது தமது கண்காணிப்பை திருப்பியுள்ளது.
தாம், தென்னிந்தியாவில் உள்ள அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அலுவலகங்களையும் இந்திய நிலைகளையும் உளவு பார்த்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரக ராஜதந்திரி ஒருவர், மாலைத்தீவில் இருந்து சென்னைக்கு இரண்டு பேரை அனுப்பிவைக்க உதவியதாகவும் இலங்கையர் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகியன பாகிஸ்தானுடன் அதிக நட்பை கொண்ட நாடுகளாக உள்ளன.
எனவே இந்த இரண்டு நாடுகளையும் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் மையப் பகுதியாக பயன்படுத்த முடியும் என்பதே இந்திய புலனாய்வினரின் கருத்தாக உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten