டக்ளஸ் ஆயுதக் குழுவிற்கு பாடம் கற்பிக்க ஆரம்பித்துள்ள கோட்டபாய !
07 May, 2014 by admin
இதேவேளை டக்ளசின் ஆயுதக் குழு தங்கியிருக்கும் வீடுகள், மற்றும் அவர்கள் புதைத்து வைத்துள்ள ஆயுதங்களையும் இராணுவமே தோண்டி எடுத்துவிட்டு அவை விடுதலைப் புலிகளின் ஆயுதம் என்று கூறிவருகிறது. இவ்வாறு நடக்க என்ன காரணம் ? டக்ளசுக்கும் கோட்டபாயவுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளது. இன் நிலையில், டக்ளஸ் அரசால் ஏன் ஓரங்கட்டப்படுகிறார் என்பது தெரியாத , அவரது ஆயுதக் குழு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கள அரசானது, எபோதும் தமிழர்களை ஏமாற்றியே வந்துள்ளது. இந்த வரலாற்றை தெரியாமல் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் சிலர் இப்போதுதான் படங்களை கற்றுக்கொள்கிறார்கள் போல உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் புலனாய்வினர் மீண்டும் கொலை அச்சுறுத்தலை !
07 May, 2014 by admin
நேற்றைய தினம் பல்கலைக்கழகம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூபட்படும் என யாழ் பல்கலைக்கழ பதிவாளரின் கடிதம் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளன. இதில் நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க துணைபுரிவோருக்கு எதிராக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட புலிகளை மீள உயிர்ப்பிக்க முனைவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியங்களை நீண்ட காலமாக அவதானித்து வந்து எச்சரித்தபோதும் அது பலனளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பேராசிரியர்களின் வழிநடத்தல்களிலேயே மாணவர் ஒன்றியம் இயங்குவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர்களும் பீடாதிபதியும் மாணவர்களும் இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவத்துள்ள குறித்த சுவரொட்டி இனி உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளது. இந்தசுவரொட்டிகளை இராணுவத்தினர் சிவில் உடையில் வந்து ஒட்டியதாகவும் சிலரிடம் இதை விநியோகித்துச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten