மாலைதீவில் கொண்டுவரப்பட்டுள்ள மரண தண்டனை தொடர்பான ஒழுங்குபடுத்தல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கண்டனம் வெளியிட்டுள்ளன.
குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு சிறுவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 7 வயதுடைய சிறுவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் இந்த நடவடிக்கை கவலை அளிக்கும் விடயம் என ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலக பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட பிரதிநிதி கத்தரின் அஸ்டன் ஆகியோர் கூறியுள்ளனர்.
நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள சட்டங்களைப் பின்பற்றி மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் இப்ராஹிம் மூஷா அலி கடந்த பெப்ரவரி மாதம் கூறியிருந்தார். |
Geen opmerkingen:
Een reactie posten