தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 mei 2014

முகத்தில் காயங்களுடன் நீதிமன்றில் ஆஜரான மாணவர்கள்



கொழும்பு கொம்பனித் தெரு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட 13 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இந்த மாணவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி இந்த மாணவர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு தடையேற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவரும் இருந்ததுடன் அவர் எவ்விதமான சிகிச்சையும் இன்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தார்.
இதனையடுத்து காயமடைந்த மாணவருக்கு உடன்டியாக சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த 13 மாணவர்களுடன் பொலிஸார் மொத்தமாக 17 மாணவர்களை இதுவரை கைது செய்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten