[ சனிக்கிழமை, 17 மே 2014, 07:38.51 AM GMT ]
மற்ற 38 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். ஒரு வேட்பாளர் தாம் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற வேண்டுமெனில், மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்குக்கு அதிகமான வாக்குகள் பெற வேண்டும். தமிகத்தில் சுமார் 4 புள்ளி 4 சதவீத வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மன்மோகன் சிங்
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை சகாக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து, ராஜினாமா கடிதத்தை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து அளித்தார் மன்மோகன் சிங்.
http://www.tamilwin.com/show-RUmsyFSbLYeoy.html
Geen opmerkingen:
Een reactie posten