நேற்று முன்தினம் வெளிவிவகாரக் குழுவின் ஆசிய-பசுபிக் உப குழுவின் முன்பாக, 2015ம் ஆண்டுக்கான அதிபர் ஒபாமாவின் வரவு செலவுத் திட்டத்தில் தெற்காசியாவக்கான தேவைகள் குறித்து அளித்த விளக்கத்திலேயே அவர் இவ்வாறு விபரித்துள்ளார்.
சிறிலங்காவில் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள் மீளவும் திரும்பியுள்ள போதிலும், பாலின அடிப்படையான வன்முறைகள் நாட்டின் சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டெனிஸ் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் எதேச்சாதிகாரத்தை வலுப்படுத்தும் போக்கு பலமாக உள்ளதாக அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் ஆசியப் பிரிவின் பதில் உதவி நிர்வாகியான, டெனிஸ் ரோலின்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் தேசிய அளவில் எதேச்சாதிகாரத்தை வலுப்படுத்தும் பலமான போக்கு இருந்தாலும், சிறிலங்கா தொடர்ந்தும் உள்ளூர் தேரதல்களை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா தேர்தல்களை ஒழுங்காக நடத்துவது குறித்து, பாராட்டும் சாக்கில், எதேச்சாதிகாரத்தை வலுப்படுத்தும் பலமான போக்கு உள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/67935.html
Geen opmerkingen:
Een reactie posten