8 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தோட்ட நிர்வாகி கைது - மூன்று கிலோ கஞ்சாவுடன் காத்தான்குடியில் ஒருவர் கைது
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 05:52.26 AM GMT ]
சிலாபம் - விஜய கட்டுப்பத்த பிரதேசத்தில் உள்ள தனியார் தென்னந்தோட்டம் ஒன்றின் நிர்வாகியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு படை அதிகாரிகளை நியமிப்பதை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எதிர்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
8 வயதான இந்த சிறுமி தாய், தந்தை மற்றும் சகோதருடன் சந்தேக நபரின் நிர்வாகத்தில் இருக்கும் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 9 ஆம் திகதி பாடசாலைக்கு சென்று திரும்பிய சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற சந்தேக நபர் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று இந்த குற்றத்தை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவராவது கேட்டால் தனது சித்தப்பா இந்த குற்றத்தை செய்தாக கூறுமாறும் சந்தேக நபர் சிறுமியிடம் கூறியுள்ளார்.
எனினும் சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, அவர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மூன்று கிலோ கஞ்சாவுடன் காத்தான்குடியில் ஒருவர் கைது
கஞ்சா போதைப் பொருளுடன் மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தன்வசம் 3.436 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்ததாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாகாண ஆளுநராக படை அதிகாரிகள் வேண்டாம்: எம்.ஏ. சுமந்திரன்
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 06:43.55 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த பதவிக்கு மீண்டும் படை அதிகாரிகளை நியமிப்பதை கூட்டமைப்பு எதிர்க்கின்றது.
ஆளுநர் பதவி என்பது சிவில் அதிகாரிக்கு உரியதாக இருக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு. இது தொடர்பில் வடக்கு மாகாண சபை யோசனை ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க நியமிக்கப்பட்டாலோ, மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆளுநராக இருப்பதோ எமக்கு பிரச்சினையில்லை.
அரச சேவையின் நிர்வாகத்துறையின் அதிகாரி ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொள்கையளவில் படை அதிகாரிகளை ஆளுநராக நியமிப்பதை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.
தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்னர் என்ன நடக்க போகிறது என்பதை கூட்டமைப்பு அவதானித்து வருகின்றது எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten