இராணுவ வெற்றியைக் கொண்டாடி எமது பல்கலைக்கழகங்களை மூடினாலும் போராட்டத்தை அடக்க முடியாது: தவிசாளர் தனிநாயகம் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 02:13.37 AM GMT ]
தமிழ் இனத்தை அழித்த நாள் தென்னிலங்கைக்கு வெற்றி விழா, ஆனால் எம் தாயகத்திற்கு துக்கநாள், இதை யார் தடுத்தாலும் நினைவு நாள் அனுஸ்டிப்பதில் மாற்றமில்லை என்கிறார் தவிசாளர் தனிநாயகம்.
முழு தமிழர் தாயகத்தையும் அழித்த நிலையில் எஞ்சிய பகுதியையும் அழிப்பதற்கு பல வகைகளில் சதிகள், இதை தடுக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என மாந்தை கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தனிநாயகம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் தெரிவித்தார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் காத்தான்குடியில் விசாரணை
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 03:38.26 AM GMT ]
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு கிழக்கு மாகாணத்தில் விசாரணைகளை நடத்தி வருகின்றது.
அதன் ஓர் கட்டமாக எதிர்வரும் ஜூன் மாதம் 6ம், 7ம் மற்றும் 8ம் திகதிகளில் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விசாரணகைள் நடத்தப்பட உள்ளன.
விசாரணை நடாத்தப்படும் நாளில் புதிதாக முறைப்பாடு செய்ய முடியும் எனவும் ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் சாட்சியங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 200 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1990ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இதுவரையில் காணாமல் போதல்கள் தொடர்பில் 18000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அவற்றில் 5000 முறைப்பாடுகள் இராணுவத்தினர் காணாமல் போனமை தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten