[ வியாழக்கிழமை, 22 மே 2014, 12:17.46 AM GMT ]
அரசாங்கத்தின் எல்லா தீர்மானங்களையும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனினும், எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு காரணத்திற்காகவும் அரசாஙகத்தை கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு இடையில் சிறந்த உடன்பாடில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தமது மனசாட்சியின் பிரகாரம் செயற்பட அனுமதியளிக்கப்பட வேண்டும்.
அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதனை பிழையாக கருத முடியாது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாத நிலைமை ஏற்பட்டால் அமைச்சுப் பதவியை துறப்பேன் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmuz.html
வடக்கு கிழக்கு இளைஞர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அறிக்கையை வெளியிடும்- பான் கீ மூனின் இளைஞர் பிரதிநிதி
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 01:54.18 AM GMT ]
இதனை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பேன் கீ மூனின் இளைஞர் விவகார பிரதிநிதி அஹ்மட் அல்ஹென்டாவி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடந்துமுடிந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில் விருந்தினராக பங்கேற்றபோதே அவர் இந்தக்கருத்தை செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரைää இளைஞர்களுக்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இளைஞர்களின் வேலைவாய்ப்புää சுகாதாரம்ää சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்களி;ல் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று அஹ்மட் அல்ஹென்டாவி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்குகிழக்கு இளைஞர்களை பொறுத்தவரையில்ää அங்கு ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்படுகிறது.
இலங்கைக்கான பிரதிநிதி தமது சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.
இந்தநிலையில் விரைவில் ஐக்கிய நாடுகள் சபை, வடக்கு கிழக்கு இளைஞர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் இளைஞர் விவகார பிரதிநிதி அஹ்மட் அல்ஹென்டாவி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmu1.html
Geen opmerkingen:
Een reactie posten